ஐயா கால அவகாசம்!

-நஜீப்-

தற்போது தேர்தல் அறிவிப்பு வந்திருப்பதால் பெப்ரவாரி 4ம் திகதிக்கு முன்னர் தீர்வுக் கதைக்கு என்ன நடக்கும்? ஏற்கெனவே ரணில் சொன்னபடி அதற்கு இன்னும் 27 நாட்கள்தான் இருக்கின்றது. ரணிலை நம்பி பேச்சுக்குப் போனவர்கள் தேர்தல் மேடைகளில் என்ன கதைகளை சந்தைப்படுத்தப் போகின்றார்களோ தெரியவில்லை.

தமிழ் மக்களில் அரசியல் உரிமைகள் எல்லாவற்றையும் மறந்து இவர்கள் தமது அரசியல் இருப்புக்கான கதைகளைத்தான் இந்த தேர்தலில் பேசி மக்கள் வாக்குகளை கொள்ளையடிக்க முனைவார்கள்.

வடக்குக் கிழக்கில் செல்வாக்குடன் இருப்பவர்கள் இந்தத் தேர்தலில் தமது சகாக்களை தள்ளி வைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்கின்ற ஏற்பாடுகள் நடப்பதால் அவர்கள் மிகுந்த அதிர்ப்தியில் இருப்பது தெரிகின்றது.

தேர்தல் சுதந்திர தினத்துக்கு பின்னால் வர இருப்பதால் ரணில்-சம்பந்தன் ஐயா போன்றவர்களுக்கு இது பெரும் நெருக்கடியாக அமையும். இது தேர்தல் காலமாக இருப்பதால் தெற்கு சிங்கள வாக்குகளை நாம் இழக்க வேண்டி வரும் எனவே எமக்கு இன்னும் கால அவகாசம் தாருங்கள் என்று ரணில் கேட்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. அப்படியானால் பெரியவர் நிலைப்பாடு?

நன்றி: 08.01.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

 SEX:ஆண்கள் உயிர் போகவும் காரணமாக இருக்கும்!

Next Story

தேசிய கீதம் இசைக்கும் போது சிறுநீர் கழித்த ஜனாதிபதி - 6 ஊடகவியலாளர்கள் கைது