ஐபிஎல்: அமீரகத்திற்கு மாற்றம்?

 

ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பால் 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் ப்ளான் பி குறித்து பிசிசிஐ புதிய முடிவு எடுத்துள்ளது. 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் எனத் தெரிகிறது. புதிய அணிகளும் ஏலத்தில் பங்கேற்கவுள்ளதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. பிசிசிஐக்கு தலைவலி கடந்த 2 ஆண்டுகளுமே ஐபிஎல் தொடரை நடத்துவதில் பெரும் சிக்கல்கள் இருந்தன.

2020ம் ஆண்டு போட்டிகள் முற்றிலும் அமீரகத்தில் நடைபெற்ற நிலையில் 2021ம் ஆண்டுக்கான போட்டிகள் முதலில் இந்தியாவில் நடத்தப்பட்டு, பின்னர் கொரோனா காரணமாக அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது ஒமிக்ரான் என்ற புதுவகை கொரோனா உருவெடுத்துள்ளதால், பிசிசிஐ-க்கு தலைவலி வந்துள்ளது. 2022 ஐபிஎல் 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரை இந்தியாவிலேயே முழுவதுமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஒருவேளை ஒமிக்ரானின் தாக்கம் அதிகம் இருந்தால் என்ன செய்வது என அனைத்து அணிகளுடனும் விரைவில் ஆலோசனைக்கூட்டம் நடத்தவுள்ளது பிசிசிஐ. அதன்பிறகு தான் தேதிகள் உறுதிசெய்யப்படும். பிசிசிஐ திட்டம் ஒருவேளை இந்தியாவில் நடத்த முடிவெடுத்தால் மும்பை, புனே, குஜராத், ராஜ்கோட், பரோடா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் அனைத்து போட்டிகளையும் நடத்தப்படலாம்.

அணிகளுக்கு ஹோம் அட்வாண்டேஜ் கொடுக்காமல் பொதுவான இடங்களில் போட்டிகளை நடத்தலாம் என ஒரு யோசனை உள்ளது. ப்ளான் பி என்ன? மற்றொரு புறம் ஒமிக்ரானின் தாக்கம் அதிகம் இருந்தால், ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திவிடலாம் என பிசிசிஐ அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியிருந்தாலும் பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் மெகா ஏலத்தின் போது அனைத்தும் தெரிந்துவிடும்.

Previous Story

கங்குலிக்கு வோர்னிங்!

Next Story

அலி சப்ரியை விரட்டவும் -ஞானசார