ஐதேக.வில் கடும் மோதல்.!

நஜீப்  

நன்றி: 13.09.2026 ஞாயிறு தினக்குரல்

ரணில்-மைத்திரி நல்லாட்சிக் காலத்தில் நாமல் ராஜபக்ஸாவை இரண்டு முறை உள்ளே போட்டார்கள். நாங்கள் போட்ட குற்றச்சாட்டில்தான் இன்று நாமல் உள்ளே போய் இருக்கின்றார் என அதற்கு உரிமை கோருகின்றார் முஜீபுர்.

ஆனால் வேடிக்கை என்னவென்றால்  அதே ரணிலும் அவர் கட்சி முக்கியஸ்தர்களும் இன்று நாமல் மீது நடவடிக்கை எடுத்திருப்பதைக் கடுமையாக எதிர்த்து வருகின்றார்கள்.

இது ஜனநாயகத்தின் குரல்களை நசுக்கும் முயற்சி. இதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது என்று ரணிலின் சகா வஜிர கண்டித்து அறிக்கை.

அவரது இந்தக் கருத்துடன் கட்சியில் இருக்கின்ற பெரும்பாலானவர்கள் முரண்படுகின்றார்கள். நான் ரணில் கைதான நேரத்தில் கூட சிறைக்குப் பார்க்கப் போகவில்லை.

அப்படி இருக்க நான் ஏன் நாமலைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விகளுக்கு கடுப்புடன் பதில் கொடுத்தார் கட்சி செயலாளர் தலதா.

Previous Story

மோடிக்கு அதிகரிக்கும் அழுத்தம்...BRICS மாநாட்டின் மாபெரும் சிக்கல் இதுதான்!

Next Story

இதெல்லாம் சாப்பிட்டால் சிறுவயதிலேயே நீரிழிவு நோய் வரும்?