/

எருமைக்கு ரூ. 80 லட்சம்!இலங்கை நாணயப்படி 2கோடி 15 இலட்சம்!!

மகாராஷ்டிரா மாநிலம் ஷாங்கிலி மாவட்டத்தில் எருமை மாடு ஒன்று 80 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. சுமார் ஒன்றரை டன் எடையுள்ள கஜேந்திரா என்ற அந்த எருமை மாட்டோடு செல்ஃபி எடுத்துக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என  செய்தி வெளியாகியுள்ளது.

 

கஜேந்திரா எருமை மாட்டின் எடையை பராமரிக்க, இந்த மாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 15 லிட்டர் பால் கொடுப்பதாகவும், நான்கு வேலையும் கரும்பு, புல் உணவாக கொடுக்கப்படுவதாக மாட்டின் உரிமையாளர் கூறியுள்ளார்.

 

இனப்பெருக்கத்துக்கு இந்த வகை மாடுகள் பெரிதும் உதவும் என்பதால் பல லட்ச ரூபாய் கொடுத்து வாங்க விவசாயிகள் போட்டி போட்டுள்ளனர் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

Previous Story

சார்லி சாப்ளின்

Next Story

கொரோனா புதிய தகவல்கள்:20.12.2021