எரிபொருள் வழங்க ரஷ்யா மறுப்பு.அமைச்சர் கஞ்சன 

ரஷ்ய தூதுவரை நேரில் சந்தித்த போது ரஷ்ய அரசாங்கத்தின் ஊடாக எரிபொருள் கடன் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வாசுதேவ நாணயக்கார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய தூதவரை நேரில் சென்று சந்தித்தேன். நான்கு நிறுவனங்களின் பட்டியலை தூதுவர் என்னிடம் கொடுத்தார். அதாவது, எரிபொருள் ஒப்பந்தம் அரசாங்கங்களுக்கு இடையே செய்யப்படாதென ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை எரிபொருளை பெற்றுக்கொள்ள ரஷ்யா கடன் வழங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எமக்கு தேவையான எரிபொருள் விபரங்களை குறித்த நான்கு நிறுவனங்களும் கோரியுள்ளன. இந்த நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டால் மாத்திரமே ரஷ்யாவில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளா்.

Previous Story

இந்நிலைக்கு மக்களின் சாபமே காரணம்- இம்ரான் MP

Next Story

சரணடைந்த ஜோன்ஸ்டன் வீட்டுக்கு...?