எரிசக்தி அமைச்சர் செயலாளர் பதவி விலகல்

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று (17) பிற்பகல் தங்களது பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிசக்தி அமைச்சில் அதிரடி மாற்றம் ; வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் பதவி விலகல் | Dramatic Energy Ministry Udayanga Hemapala Resigns

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதி தொடர்பான நடைமுறைகளை ஆராய்வதற்காக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விசாரணைகள் எவ்விதத் தலையீடுகளும் இன்றி, பாரபட்சமற்ற முறையிலும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அரச நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை பேணும் முயற்சியாகவும் இந்த பதவி விலகல் பார்க்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

Previous Story

කුමාරගේ ඉල්ලා අස්වීමට තීරණය කිරීමේ මොහොත එක්ක නලින්ද විජිත බිමල් ප්‍රබලයන් මාධ්‍යට එයි

Next Story

அமெரிக்காவுக்கு எதிராக களமிறங்கும் சீனா?