என்பிபி.க்கு கடுமையான காயம்!

நஜீப்

நன்றி:09.11.2025 ஞாயிறு தினக்குரல்.

அனுராதபுரம் இபலோகம ஜனாதிபதி அனுரகுமாரவின் ஊரான தம்புத்தேகமவுக்கு மிகவும் அண்மையில் உள்ள ஒரு இடம். அந்த இடத்தில் பாடசாலை அதிபர் அவரது மகன் போதைப் பொருட்களுடன் பிடிபட்டிருக்கின்றார்கள்.

அதிபரின் மனைவி போலியகொட நகரசபையில் ஆளும் என்பிபி. உறுப்பினர். தமது தரப்பில் இப்படி எவரும் கிடையாது என்று மார்தட்டிக் கொண்டிருந்த அரசாங்கம் இந்தச்சம்பவத்தில் கடுமையான காயங்களுக்கு இலக்காகி இருக்கின்றது.

அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. இதற்கு முன்னர் சபாநாயகர் பட்டப்படிப்பு மற்றும் 300 கெண்டேனர்கள் துறைமுகத்தில் இருந்து வெளியே போன விவகாரங்கள் என்பன சிறுகாயங்கள். ஆனால் இந்த போதை கைப்பற்றப்பட்டது மிகமிகப் பெரிய காயம்.

இதனை மறைக்கவோ  நியாயப்படுத்தவோ எவராது முயன்றால் அது நாகரிகமான ஒரு செயலாக அமைய மாட்டாது. மூன்றுசதவீத ஆதரவு அறுபதாக அதிகரிக்கின்ற போது இது எதிர்பார்க்கக்கூடியதே. இதற்குக் கட்சி வழங்கும் தண்டனை அடுத்தவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.

 

Previous Story

අය වැය රස කතා..!

Next Story

“මේක පොදු ජනතාවගේ ආණ්ඩුවක්..”-කුමාර් ගුණරත්නම් !