-நன்றி கார்டியன் நியூஸ் மேல் தின (01.05.2025) இசு
முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் அமைச்சு விவகாரத்திலும் இஸ்ரேல் விவகாரத்திலும் ஒரு சிறு காயத்தை இந்த அரசு ஏற்படுத்தி இருப்பதை மறுக்க முடியாது.
ஆனால் இந்தக் காயங்கள் வருகின்ற உள்ளூராட்சித் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றது என்று சொல்ல முடியாது.

இதற்குக் காரணம் சமூக ஊடகங்களில் இப்படியான பரப்புரைகளை மேற்கொள்ளும் நபர்களும் சஜித்-SJB அரசியல்வாதிகளும் மட்டுமே இதனைத் தூக்கிப்பிடிப்பதற்குக் காரணம். முஸ்லிம் சிவில் சமூகம் இதனைப் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களில் ஹக்கீம் ரிசாட் அதாவுல்லாஹ் அணிகளுக்கு எதிரான பிரதான போட்டியாளர் அனுர அணி என்ற நிலை அங்கு காணப்படுகின்றது.
இது முஸ்லிம் பிரதேசங்களில் என்பிபி செல்வாக்கை உறுதி செய்கின்றன. முஸ்லிம் தனித்துவக் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் தமது கோட்டைகளை NPP. யிடம் இந்த முறை பறிகொடுக்கும் நிலை.
தேர்தலுக்குப் பின்னர் முஸ்லிம் தனித்துவத் தலைமைகள் ஜனாதிபதி அனுரவுடன் இணக்க அரசியலுக்கு இப்போது பச்சை கொடி காட்டி வருகின்றார்கள்.
நாம் எப்போதும் ஜனாதிபதி கட்சியே-ஹிஸ்புல்லாஹ், சஜித்தின் தொலைபேசி செத்துப்போன கேஸ் அவர்களுடன் இதன் பின்னர் நமக்கு உறவு கிடையாது- மு.கா.ஹக்கீம் போன்றவர்கள் பல்டி அடிப்பதும் இதனால்தான்.





