என்னதான் ஒப்பந்தம் அது!

-நஜீப்-

இருபதுக்கு கைதூக்கிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை என்று சொல்லிச் சொல்லியே தலைவர் காலத்தை கடத்தியது ஏன் என்பது இப்போது அந்த சமூகத்துக்குப் புரிந்திருக்கும். ஆனால் எமக்கு இதில் புரிந்து கொள்ள முடியாத விடயம்:-

வழியனுப்பி வைத்த தலைவரை சமூகம் ஏன் இன்னும் கேள்வி எழுப்பாமல் இருப்பது என்பதுதான். சுற்றாடல்காரர், ஜனாதிபதியுடன் தலைவர் உடன்பாடு செய்து கொண்ட திகதி, பசில் தலைவர் வீட்டுக்கு வந்து பேசியது எல்லாம் போட்டுடைத்த பின்னரும் ஏன் சமூகம் இன்னும் மௌனம்.!

இல்லை இது கட்டுக் கதைகள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியாக இருந்தால்  தனது இமேஜைக் கெடுத்துக் கொண்டிருப்பவருக்கு சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் தலைவர் பெருந்தன்மை என்றும் பெயர் வைப்பார்கள் கை கூலிகள்.

இதை பெருந் தன்மை என்பதனை விட நாம் முன்பு சொன்னது போல மூக்குடையும் விடயம் என்பதால் தலைவர் அடக்கி வாசிக்கின்றார். ராஜாக்கள் GOTA வீட்டுக்கு போ போராட்டத்திலும் ஆள் நல்ல அடக்கத்துடன்தான், புரிகின்றதா டீல்?

நன்றி: 01.05.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மே  3 அபாய மணி! அநுரகுமார அதிரடி

Next Story

பட்டினி  அகதிகளின் கண்ணீர்க் கதை