எந்தவொரு ராஜபக்சவும் பதவி விலகத் தயாராக இல்லை!

எந்தவொரு ராஜபக்சவும் தனது பதவியை  இராஜினாமா செய்யத் தயாராக இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஷீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றிடம் அவர் இது குறித்து தெரிவித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற வகையில், பதவி விலகும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

பதவி விலகல் தொடர்பில்  ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொருவர் வெளியிட்ட அறிவிப்பு

பதவி விலகலுக்கு மறுப்பு

ராஜபக்ச குடும்பத்தில் மற்றுமொரு ராஜபக்ச இராஜினாமா செய்யவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது சஷீந்திர ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடியாக தோற்றம் பெற்றதை அடுத்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மே மாதம் 9ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இம்மாதம் 9ஆம் திகதி ராஜபக்ச குடும்பத்தின் மற்றொரு உறுப்பினரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.

இதனை அடுத்து ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு உறுப்பினர் பதவி விலகவுள்ளதாக ஊடகங்களில் செய்திகளின் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதவி விலகல் தொடர்பில்  ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொருவர் வெளியிட்ட அறிவிப்பு

Previous Story

இந்தியாவில் மதக் கலவரம்; பல முஸ்லிம் பிரமுகர்களின் வீடுகள் இடிப்பு

Next Story

மோடி தொடர்பில்  கருத்து! பதவி விலகிய CEB தலைவர்