”இன்று இரவு ஈரான் என்ற நாடே இருக்காது. மொத்த மக்களும் கொல்லப்படுவார்கள்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் தான் டிரம்புக்கு எதிராக ஈரான் கையில் 2 பெரிய பிளான் உள்ளது.
இந்த பிளான் சாத்தியமானால் சவுதி அரேபியா, கத்தார் உள்பட மொத்த மத்திய கிழக்கு நாடுகளும் ஸ்தம்பிப்பதோடு, ஐரோப்பிய நாடுகளும் பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொள்ளும். டிரம்பின் மிரட்டலுக்கு எதிராக ஈரான் வைத்திருக்கும் பிளான்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயோன போர் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை இன்று இரவு 8 மணிக்குள் திறக்காவிட்டால் ஈரான் என்ற நாடே இருக்காது. மொத்த மக்களும் அழிக்கப்படுவார்கள் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
தற்போது ஈரானின் ரயில்வே மேம்பாலங்கள், சாலை மேம்பாலங்களை குறிவைத்து இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே டிரம்ப் வெளியிட்டுள்ள மிரட்டல் ஈரான் மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.
ஈரான் கையில் 2 பிளான் இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரானை அழிக்கும் நோக்கில் தாக்குதல் நடத்தினால் 2 பெரிய பிளான்களை கையில் வைத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈரானின் மூத்த அதிகாரிகள் ராய்ஸ்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளதாவது:
”வெறும் வாக்குறுதிகளுக்காக மட்டுமே நாங்கள் ஹார்முஸ் ஜலசந்தியை திறககமாட்டோம். எங்கள் நாட்டின் உள்கட்டமைப்பான மின்உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தபட வாய்ப்புள்ளது.
இதற்கு உரிய முறையில் பதிலடி கொடுப்போம். கத்தார் உள்பட பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளின் மின்உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். இதனால் சவுதி அரேபியா, கத்தார் உள்பட மொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் இருளில் மூழ்கியும்.
அது மட்டுமின்றி அமெரிக்கா எல்லை மீறி சென்றால் ஈரானின் நட்பு நாடுகள் முக்கிய கடல் வழித்தடங்களை முடக்கும். கடல் வழி போக்குவரத்துகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஈரானை அழிக்க அமெரிக்கா நினைத்தால் சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என வார்னிங் செய்யப்பட்டுள்ளது. இது ஈரானின் முதல் பிளானாகும்.
ஈரானின் 2வது பிளான்: அதேபோல் அதோடு ஏற்கனவே ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக ‘பாப் எல் -மண்டேப்’ (Bab al-Mandab Strait) ஜலசந்தியை ஈரான் மூட நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த ‘பாப் எல்-மண்டேப்’ ஜலசந்தியை மூடினால் இன்னும் பல உலக நாடுகள் பாதிக்கப்படும். ஏனென்றால் இந்த ‘பாப் எல்-மண்டேப்’ என்பது செங்கடலை (Red Sea) ஏடன் வளைகுடா மற்றும் அரபிக்கடலுடன் இணைக்கிறது.
இதனால் இது முக்கிய இடமாகும். இதன் ஒரு பக்கம் ஏமன் (ஆசியா) நாடும், மறுபக்கம் ஜிபூட்டி மற்றும் எரித்திரியா (ஆப்பிரிக்கா) நாடுகளும் அமைந்துள்ளன. தற்போது ஏமனில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உள்ளனர்.
இவர்கள் ஏற்கனவே செங்கடலில் செல்லும் இஸ்ரேல், அமெரிக்க கப்பல்களை தாக்கி வருகின்றன. அடுத்தததாக ஈரான் தூண்டுதலில் ‘பாப் எல் மண்டேப்’ ஜலசந்தியை மூடலாம்.
என்னனெ்ன பாதிப்பு வரும்? இது நடந்தால் உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும். செங்கடலுக்கு கப்பல்கள் செல்லும் நுழைவு வாயிலே இதுதான் என்பதால் எகிப்தின் சுயஸ் கால்வாய் வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்து முற்றிலும் நிற்கும்.
மேலும் வளைகுடா நாடுகளிலிருந்து ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கு செல்லும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (LNG) இந்த பாதை வழியாக தான் செல்கிறது. இதனால் இந்த சப்ளையும் பாதிக்கப்படும்.
இதனால் உலகளவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும். மேலும் கப்பல்கள் ஆப்பிரிக்காவை சுற்றி செல்ல வேண்டிய நிலை இருக்கும்.
இதனால் பயண நேரம் 10 முதல் 14 நாட்கள் வரை அதிகரிப்பதோடுபொருட்களின் விலையும் கிடுகிடுவென அதிகரிக்கும். ஒரு வரியில் கூற வேண்டும் என்றால் சர்வதேச வர்த்தகத்தில் சுமார் 10% முதல் 12% வரை இந்தப் பாதை வழியாகவே நடக்கிறது. இதனால் அதில் அடி விழும் என்பது குறிப்பிடத்தக்கது.




