ஊரையும் உலகையும் சுடுகாடாக்கும் போரின் முன் பின்னய கதைகள்

நஜீப் பின் கபூர்

நன்றி: 22.03.2026 ஞாயிறு தினக்குரல்

*****

அலி லரிஜானி கொலையால் சமாதனம் கண்ணுக்கு எட்டாத தூரத்தில்!

இது ட்ரம்பின் போர்-ஜெர்மனி. நமக்கும் இதில் ஆர்வமில்லை-நேட்டோ!

சமாதானம் பேசுவதற்கு இன்று உலகில் யாரும் இல்லாத ஒரு அவலம்!

போரை வைத்து சில எதிரணியினர் இங்கு அரசு அமைக்க பகற்கனவு!

*****

நாடுகளில் அவ்வப்போது இயற்கை அழிவுகள் நடந்து பல்லாயிரம் இலட்சம் என்று மனித உயிர்கள் பலியாகின்றன. இதனை நாம் மிக அண்மையில் கூட பார்த்தோம். கொவிட் வந்த போதும் சுனாமி நேரத்திலும் நாடு பேரழிவை கண்டது. இது போல உலகில் இருக்கின்ற பல நாடுகளுக்கு இப்படியான அனுபவங்கள் இருக்கும். அதனைக்கூட கடவுளின் கணக்கில் வரவு வைத்து கொடுத்தவனே வாங்கிக் கொண்டான். என்று பேசுவதையும் நாம் பார்க்கின்றோம்.

இதனைத் தப்பாக விமர்சிக்க முடியாது. அதேபோன்று உலகில் நடக்கின்ற போர்களையும் நாம் அனர்த்தங்கள் என்று எடுத்துக் கொள்வதில் தப்பில்லை. இது மனிதன் தனக்குத்தானே தண்டனை வழங்கிக் கொள்ளும் ஒரு கொடூரம்.

போர் பற்றிய வரலாறுகள் அல்லது சம்பவங்கள் என்று பல இருக்கின்றன. இதில் சிலுவைப்போர் மேற்கைரோப்பிய கிறிஸ்தவர்களுக்கும் மத்திய கிழக்கு முஸ்லிம்களுக்குமிடையே நடைபெற்றது. அதுவும் ஜெருசலத்தை மையப்படுத்திய ஒரு போராகவே அமைந்திருந்தது.

அப்போது கிறிஸ்தர்வர்கள் கையில் இருந்த ஜெருசலத்தை முஸ்லிம்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட்டனர். இதற்கு அடிப்படை பிராந்தியத்தில் இருந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றதால் ஜெருசலத்தை கிறிஸ்தவர்கள் இழந்திருந்தனர்.

இதனால் 1095-1291 வரை இரண்டு நூற்றாண்டுகள் வரை நடந்த மோதல் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான போராகவே அமைந்தது. இது ஜெருசலத்தை முஸ்லிம்களிடமிருந்து மீட்பதற்கான புனிதப்போராகத்தான் கிருஸ்தவர்கள் கருதினார்கள். அதே ஜெருசலத்தை இன்று இஸ்ரேல்-யூதர்கள் தமது தலை நகர் என்கின்றார்கள்.

முஸ்லிம்கள் அது தங்களது புனித பிரதேசம் என்று போர்க்களத்தில் நிற்கின்றார்கள். அடிப்படையில் இந்த கிருஸ்தவம் இஸ்லாம் யூதம் என்ற மூன்று சமயங்களுக்கும் அண்ணன் தம்பி உறவு முறை. இதனைத்தான் வரலாறு கூறுகின்றது. இருந்தாலும் இன்று இந்த பகைமையை வைத்துத்தான் முழுப்பிராந்தியமும் தீயாய் எரிகின்றது.

அதன் பின்னர் 1914-1918ல் முதலாம் உலகப்போர். துருக்கியை கைப்பற்றும் ஒரு முயற்சியும் இதில் இருந்தது. இதில் ஏறக்குறைய ஒரு கோடிப்பேர் இறந்து இரண்டு கோடி ஐம்பது இலட்சம் பேர்வரை காயமுற்றனர். ஜேர்மனி ஆஸ்திரியா அங்கேரி இத்தாலி துருக்கி ஒரு அணியில். ஏiனையோர் மாற்று அணி.

இதுவரை பேரரசாக இருந்து வந்த துருக்கியில் உள்நாட்டுக் குழப்பங்கள் பட்டினி என்பன காரணமாக மில்லியன் வரையிலான மக்கள் சாக வேண்டி வந்தது. இரண்டாம் உலப்போர் 1939-1945ல் உலகப்போர். ஜேர்மன் அடெல்ப் ஹிட்டலர் அச்சு அணியை வழிநடாத்தினார். போரில் நேச அணிகளே வெற்றி பெற்றன.

போரில் ஒன்பது கோடிப்பேர் வரை இறந்தனர். இன்று எதிரும் புதிருமாக இருக்கின்ற ரஸ்யா-அமெரிக்க பிரித்தானியா நேச அணியில் நின்றன. ரஸ்யாவுக்குள் படைகளுடன் களத்தில் இறங்கியதால் தனது அழிவை ஹிட்லர் தானாகவே தேடிக் கொண்டார். இதே போன்று ஒரு பின்னணிதான் இப்போதும் தோன்றி இருக்கின்றது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஓரணியில். அதன் நட்பு நாடுகளான நேட்டோ இந்தப்போரில் இறங்குவதா கூடாதா என்று கடும் சிக்கலில் இருக்கின்றனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான தற்போதய நெருக்கடியின் மையப்புள்ளியும் ஏறக்குறைய ஜெருசலம் என்று சொல்லலாம். ஈரானில் 1979க்குப் பின்னர் தோன்றிய இஸ்லாமியப் புரட்சி மத்திய கிழக்கில் ஒரு பிராந்திய வல்லரசை தோற்றுவித்துவிட்டது.

இது இஸ்ரேலுக்கு மட்டுமல்ல அமெரிக்காவின் உலக வல்லாதிக்கத்துக்கு பெருத்த சவாலாக மாறி விட்டது. இதனால் அமெரிக்க நலன்களுக்கு உலகளாவிய நெருக்கடி குறிப்பாக பெற்றோலியத்தை வைத்து ஈரான் சாதிக்கின்றது. இதனால் சீனா ரஸ்யா போன்ற நாடுகள் இன்று உலக அளவில் மேலாதிக்கம் செலுத்துகின்ற நிலை.

நமது பார்வையில் ஈரானை வைத்து சீனா ரஸ்யா வடகொரியா என்பன அமெரிக்காவுக்கு தக்க பாடம் கற்றுக் கொடுக்கின்ற ஒரு முயற்சியில் இறங்கி இருக்கின்றன. எனவே இன்று அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எதிரான ஒரு கூட்டணி உலகில் உருவாகி இருக்கின்றது. போரில் நாம் வழக்கமாக சொல்வது போல இந்த அணிக்கு பின்னடைவு வந்தால் இனிவருகின்ற ஒரு கால் நூற்றாண்டுகளுக்கு காட்டில் தனிச் சிங்கம் அமெரிக்காதான்.

அதே போன்று அமெரிக்கா-இஸரேல் கூட்டணிக்கு சரிவு என்றால் அமெரிக்க சர்வதேச அரங்கில் பல் இழந்த சிங்கம்தான். எனவே தனக்கு அந்த நிலை வருவதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளமாட்டாது. அப்படி நடந்தால் இஸ்ரேல் கெதி அவ்வளவுதான். வளைகுடா நாடுகளுக்குப் பாதுகாப்புத் தருகின்றேன் என்று அரபு மண்ணில் முகாம் போட்ட அமெரிக்கா இன்று தன்யையே பாதுகாக்த்துக் கொள்ள முடியாது தலைதெரிக்க ஓடி அவமானப்பட்டிருக்கின்றது.

மறுபுறத்தில் ஈரானுக்கு தோல்வி வருமாக இருந்தால் சீனா மற்றும் ரஸ்யாவின் எதிர்காலமும் பெருளாதார வல்லமைக்கும் ஆப்புத்தான். ஈரானுடனான போர் ஒரு கயிறிழுப்பாகத்தான் சர்வதேச அரங்கில் பார்க்கப்படுகின்றது. இது விவகாரத்தில் அமரிக்க-ட்ரம்ப் நடவடிக்கையை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அது மனிதாபிமானத்துக்கும் உலக நாகரிக்த்துக்கும் உகப்பானதல்ல. ஆனால் அது பற்றி பேசுவதற்கு இன்று உலகில் எந்த ஒரு அமைப்பும் கிடையாது. ஐ.நா. என்பது அமெரிக்காவின் நலன்களை முன்னிருத்திய ஒரு அடிமைகளின் சம்மேலனன். அதனால்தான் அங்கு அமெரிக்க நலன்களுக்கு முன்னுரிமை.

இன்றும் இந்தப் போர் எப்படி யாருக்கு சாதகமாவோ பாதகமாகவே எப்போது முடிவுக்கு வந்தாலும் உலக வரை படத்தில் அது கடுமையான காயங்களை உண்டு பண்ணும். இதன் மையப்புள்ளியாக மத்திய கிழக்கே இருக்கும் என்பது நமது கணக்கு. இதனைத் தான் நாம் சிலுவை யுத்தத்திலும் பார்த்தோம். ஈருலக போர்களிலும் பார்த்தோம். வரும் நாட்களிலும் பார்க்க இருக்கின்றோம்.   இரு தரப்பும் இலகுவாக இந்த கயிற்றை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் ஈரானுக்கு எதிராக நடந்த சண்டையின் துவக்ககாலத்திலே இது ஒரு நாளும் ஒரு உலகப் போர் என்ற நிலைக்குச் செல்ல மாட்டாது வேண்டுமானால் ஒரு இருபத்தி ஐந்து ஐம்பதாயிரம் பேர்வரை இதில் மாண்டு போகலாம் என்று சொல்லி இருந்தோம்.

இன்றும் நமது நிலைப்பாடு அதுவாகத்தான் இருக்கின்றது. தற்காலத்தில் ஒரு மோதல் உலகப்போராக மாறி அதில் அணுகுண்டுகள் பாவனைக்கு வருமாக இருந்தால் அதன் வெற்றி தோல்வியைப்பார்க்க யாரும் எஞ்சி இருக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் நாம் அப்படி ஒரு கருத்தை சொல்லி வருகின்றோம்.

இது தவிர பல உள்ளூர் போராட்டங்கள் பல்லாயிரக் கணக்கானவர்கள் மடிந்து போய் இருக்கின்றார்கள். இதற்கு நாம் வெளியில் கூட ஆதாரங்களை தேட வேண்டியதில்லை நாட்டில் வடக்குக் கிழக்கில் நடந்த முப்பதாண்டுகள் வரையிலான போரில் இரண்டு இலட்சம் பேர்வரை மடிந்து போய் இருக்கின்றார்கள்.

ஏன் தற்போது பதவியில் இருக்கின்ற ஜேவிபி. அன்றைய அரசுடன் நடத்திய அரசியல் போராட்டங்களிலும் ஒரு இலட்சம் பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல். அதுபோன்று அண்மையில் காசாவில் எண்பதாயிரம் பேர்வரையிலான அப்பாவி சிவிலியன்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் இது தவிர கொங்கோவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிவிலியன்கள் போராட்டங்களினால் பலியாக இருக்கின்றனர்.

இன்னும் பல இடங்களில் இப்படியான சண்டைகள் நடந்து கொண்டு வருகின்றன. ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இதுவரை இந்த ஈரான் நெருக்கடி போல ஒன்றை உலகம் சந்திக்கவில்லை.

துவக்கத்தில் ஈரான் எம்மைத் தாக்க இருந்தது அதனால் நாம் முன்கூட்டியே தாக்கி விட்டோம். புதிதாக ஈரான் அணுகுண்டு சமைத்து விட்டால் இஸ்ரேல் நாசம். பக்கத்தில் இருக்கும் அரசு நாடுகளுக்கு அழிவு அவர்களும் தாக்க சொன்னார்கள். எம்மையும் அவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள்.

இது ட்ரம்ப் கதை. இலங்கைக்கு அருகில்  கப்பலைத் தாக்கியது ஒருபொழுபோக்கிற்கு என்றவர் இப்போது கார்க் தீவுத் தாக்குதலும் அப்படித்தானாம்.! இவரின் மனநிலையை ஒரு முறை எண்ணிப்பாருங்கள். இப்படிப்பட்ட மனிதர்களுடன் தான் உலகு பயணிக்க வேண்டி இருக்கின்றது. உலகிற்கே அமெரிக்க வழிகாட்டி என்ற ஒரு கருத்து இருக்கின்றது. இவற்றை எல்லாம்பார்க்கும் போது என்னவென்று சொல்வது.

போரில் முஜிதபா கமெய்ணி கொல்லப்பட்டு விட்டார் நெத்தென்யாஹ் கொல்லப்பட்டு விட்டார் மேல் நாட்டிலிருந்து தப்பி ஓடி இருக்கின்றார்கள் காயத்துக்கு வைத்தியம் பார்க்கப் போய் இருக்கின்றார்கள் என்றெல்லாம் வரும் கருத்துக்கள் போர் யுக்திகள். அதில் யதார்த்தம் இருக்கலாம் இல்லாமலும் அவர்கள் இருக்கின்ற இடத்தை கண்டறிவதற்காக ஒரு முயற்சியாகத்தான் இந்தப் பரப்புரையை நாம் பார்க்க வேண்டும்.

மேலும் ஈரானிடம் ஆயுதங்கள் தீர்ந்து விட்டது அமெரிக்க இஸ்ரேலிலும் அப்படித்தான் என்று சொன்னார்கள். ஆனால் அது யதார்த்தமற்றது என்பது இப்போது தெரிய வந்திருக்கின்றது.

ஊடகங்கள் போர் பற்றி தமது விருப்பங்களை எப்படி எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றனவோ அதே போன்றுதான் போரை நடாத்துகின்ற தலைவர்களும் அதிகாரிகளும் போர் உத்தியாக பல கதைகளை சொல்லிக் கொண்டு வருகின்றார்கள். அவற்றை எல்லாம் பொதுமக்கள் எடுத்து காதில் வாங்கி ஏமாறக்கூடாது.

லரிஜானாயின் கொலை சமாதானம் என்ற பேச்சுக்கே வாய்ப்பில்லை என்ற நிலைக்கு போரை தள்ளி இருக்கின்றது என்று நாம் நம்புக்கின்றோம்.தாக்குதலில் அவர் தனது பதினேழு வயது மகனையும் இழந்திருக்கின்றார். இது போன்று டசன் கணக்கான தலைவர்கள் மீண்டும் ஈரானில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இப்போது போருடன் தொடர்புடைய மேலும் சில குறிப்புக்களைப் பார்ப்போம்.   பாரசீக வளைகுடாவிலிருந்து பெற்றோலிய வினியோகத்துக்கு தமது நேசநாடுகள் மட்டுமல்ல சீனா ரஸ்யா போன்றவையும் உதவ கோருகின்றார் ட்ரம்ப்.

தான் 40 வருடங்களாக கண்டுவரும்  ஈரானை அழிக்க வேண்டும் என்ற கனவை அடைய இது தன்க்கு நல்லதொரு வாய்ப்பு. இது போர் பற்றி நெத்தென்யாஹ் நிலைப்பாடு. இஸ்ரேல் ஈரான் வெற்றி கொண்டு போரை முடிக்க விரும்புகின்றது.

அதே நேரம் நாம் அணு குண்டுகளைப் பெறும்வரை நீங்கள் எங்களைத் தாக்கிக் கொண்டா இருக்கப் போகின்றீர்கள் என்று ஈரான் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர்களும் புதிய புதிய ஆயுதங்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள் இதனை நாம் கடந்தவாரமே சொல்லி இருந்தோம்.

ட்ரம்ப் எதிர்பார்ப்பது போல அவர்களின் நட்பு நாடுகள் கூட இந்தப் போருக்கு உதவத் தயாராக இல்லை. ஜேர்மன் இது எங்களுடைய யுத்தமல்ல அமெரிக்காவின் யுத்தம் என்று கூறி இருக்கின்றது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் நிலையும் இதுதான். இஸ்ரேல் போரை தொடர்ந்து முன்னெடுத்து ஈரானை அழிக்க முனைகிறது. ஆனால் போரில் சிக்கிக் கொண்ட அமெரிக்கா அதிலிருந்து வெளியேற தடுமாறுகின்றது.!

சீனாவும் ரஸ்யாவும் ஈரானுக்கு தமது முழு ஆதரவை வழங்கி  தமது ஆயுதங்களையும் பரீட்சித்து வருகின்றன. அமெரிக்காவும் இஸ்ரேலும் எதிர்பார்த்தது போல போர் ஒரிரு நாட்களில் தீர்க்கமான கட்டத்தக்கு வரவில்லை. ஈரான் ஆட்சியாளர்கள் சரணடைய வேண்டும் என்ற பேச்சுக்கே வாய்ப்பில்லை.

போரைத் துவங்கியவர்கள் இதனை உணர்ந்திருக்கின்றனர். அதன் சுமையை முழு உலகும் அனுபவிக்கின்றது. போரைத் துவங்கியவர்கள் அதற்கான கால அட்டணை பற்றி உணந்திருக்கவில்லை.

பாகிஸ்தான் அரச ஊழியர்களின் சம்பளத்தில் முப்பது வீதம் வெட்டு. இந்திய மத்திய கிழக்கில் இருக்கும் தனது தொழிலாளர்களை சவுதி அரேபியா ஊடாக திருப்பி அழைக்க நடவடிக்கை. நாமும் அதனைத்தான் செய்ய வேண்டி வரும். இங்குள்ள எதிரணி அரசியல்வாதிகள் போரை வைத்து ஆட்சிக் கவிழ்ப்பு செய்வது பற்றி பேசி வருவதாக  குற்றச்சாட்டு.

நாம் கடந்த வாரங்கள் சொல்லி வருவது போல போர் நீடிக்க அவலங்களும் நாளுக்கு நாள் அதிகரிப்பதை அவதானிக்க முடிகின்றது. புதன்கிழமை காரியாலய ஓய்வு. இன்னும் ஓரிரு நாட்களில் கல்லூரிகளுக்கு பூட்டு. போக்குவரத்து நெருக்கடி. உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் நெருக்கடி உல்லாசப் பிரயாணத்துறை கடும் சரிவு. பொருட்களின் விலை அதிகரிப்பு. அவற்றின் தட்டுப்பாடு நிருவாகத்தை முன்னெடுக்க முடியாத ஒரு நிலை என இது நீண்டு கொண்டு செல்லும்.

குடிகள் இவற்றை சுமக்க வேண்டி வரும். போர் உடனே நின்றாலும் இதிலிருந்து மீள்வதற்கு நாமக்கு மட்டுமல்ல முழு உலகிற்குமே  கனிசமான விலையையும் தியாகங்களையும் செய்துதான்  மீளவேண்டி வரும். பல நாடுகளில் இது அரசுகளுக்கு முடிவுகாலமாகவும் அமையக் கூடும்.

Previous Story

அமெரிக்காவை அழிக்க அணு ஆயுதம்

Next Story

போரை முடிக்க பரிசீலனை - டிரம்ப்