ஹிஸ்புல்லா தான் டார்கெட்..

This handout video grab taken and released on August 9, 2022 by the Russian Space Agency Roscosmos shows the Soyuz-2.1b rocket carrying the Khayyam satellite blasting off from a launchpad at the Baikonur Cosmodrome. - An Iranian satellite launched by Russia blasted off from Kazakhstan early August 9, 2022, and went into orbit amid controversy that Moscow might use it to improve its surveillance of military targets in Ukraine. (Photo by Yuri KADOBNOV / AFP)

இரக்கம் காட்டாத இஸ்ரேல்!

தரைமட்டமான கட்டிடங்கள்!

கலங்க வைக்கும் உயிர் பலி !

Israel bombs Lebanon updates: Hezbollah responds as Israeli raids kill 569

காசாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஹிஸ்புல்லாவை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் மூர்க்கமான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நடத்திய விமானப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 4000ஐ கடந்துள்ள நிலையில் 100 குழந்தைகள் பலியாகி இருப்பதாகவும், 3,000 மேற்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வரும், நிலையில் கடந்த ஆண்டு முதல் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அங்கு நிலைமை தீவிரமான நிலையில், பிற நாடுகளுக்கும் போர் பரவியுள்ளது. ” விளைவுகளை நினைத்து பார்க்கவே முடியாது.

ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்கப்போகிறதா இஸ்ரேல்?” கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி முதல் இஸ்ரேலின் நடவடிக்கை பதில் கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Israel-Hezbollah live updates: Netanyahu orders 'full force' in Lebanon despite U.S. push for cease-fire

மேலும் இஸ்ரேலுக்குள்ளேயே நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டு மக்களையும் வெளிநாட்டு மக்களையும் கொன்று வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் போர் விமானங்கள் மூலமாகவும் ஏவுகணைகள் மூலமாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

போர் தொடங்கி பல மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் கொல்லப்படுவதாக ஹமாஸ் குற்றம் சாட்டி வருகிறது. மேலும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக பிற பகுதிகளுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Israel launches strikes on Hezbollah in wake of device explosions - ABC News

இந்த நிலையில் போர் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் மீது இஸ்ரேல் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக புகார் எழுந்திருக்கிறது.

மேலும் ஐநா ஊழியர்கள் உள்ளிட்ட 18 பேர் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் அங்கு இருந்ததால் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக லெபனான் நாட்டில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதை அடுத்து அந்த அமைப்பினரை குறி வைத்து நடத்தப்பட்ட பேஜர் தாக்குதலில் பலர் உயிரிழந்த நிலையில் 2500 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

“நம்பர் 2” தலைவர் காலி!

Hezbollah leader says war with Israel has entered 'new phase' after killings of top militant figures - ABC News

ஹிஸ்புல்லா உளவு படை மையம் தரைமட்டம்.. நள்ளிரவில் இஸ்ரேல் பொழிந்த குண்டு மழை! ” இதை அடுத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் ராணுவத்தினர் இடையே போர் தீவிரமடைந்து இருக்கிறது.

இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். தொடர்ந்து ஈரானும் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் களத்தில் இறங்கி இருக்கிறது.

இந்த நிலையில் லெபனானின் பெய்ரூட் மற்றும் புறநகர் பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் விமானப்படை ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஹெஸ்புல்லா குழுவினரின் முகாம்கள் அழிக்கப்பட்டு இருக்கின்றன.

Real fear for millions in Lebanon as border clashes escalate and Hezbollah-Israel confrontation enters 'new phase' | World News | Sky News

400-க்கும் மேற்பட்ட அந்த அமைப்பின் போராளிகள் கொல்லப்பட்டு இருக்கும், நிலையில் இதுவரை லெபனான் நாட்டில் நான்காயிரம் பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பலியானவர்களின் நூற்றுக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் எனவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தரைமட்டமான நிலையில் பலர், அண்டை நாடான சிரியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதே நேரத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட் – டாமாஸ்கஸ் இடையிலான பல இடங்கள், பாலங்கள் இஸ்ரேல் ராணுவத்தால் குறிவைத்து அழிக்கப்பட்டுள்ளன. இதனால் அண்டை நாடுகளுக்குள் தஞ்சம் புக கூட முடியாமல் லெபனான் மக்கள் தவித்து வருகின்றனர்.

Israel-Hamas war latest: Israel claims death of Hezbollah commander as Beirut toll rises | AP News

தற்போது லெபனான் எல்லைக்குள் புகுந்துள்ள இஸ்ரேல் வீரர்கள் பதுங்கு குழிகள், சுரங்கங்களை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். மேலும் தீவிரவாதிகளின் வெடிகுண்டுகள்,ஏவுகணைகள் பதித்து வைக்கப்பட்டிருக்கும் சுரங்கப்பாதைகள் கண்டறியப்பட்டதாகவும், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Previous Story

விமான சேவைகள் முற்றிலும் ரத்து

Next Story

சிரிதரனை மிஞ்சும் சுமந்திரன்!