உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூழ்ச்சி அம்பலம்- பேராயர்

சூழ்ச்சியாளர்களுக்கு ஆட்சியை பிடிக்க முடியும். ஆனால் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாது என தெரிவித்த பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எனவே, இந்நாட்டுக்கு மாற்றம் வேண்டும். புதிய ஆரம்பமும் அவசியம் என்றும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதி கோரி நீர்கொழும்பு பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையலேயே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தேர்தலுக்காக பயன்படுத்தினர்.அதன் பின்னணியில் சூழ்ச்சி இருக்கின்றது என நாம் ஊகித்தோம். தற்போது அது நிரூபணமாகி வருகின்றது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை. முஸ்லிம்மக்கள்மீது பழி சுமத்த முற்பட்டனர். இந்தியாவில் உள்ள யாசகர் ஒருவர் எமக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.

இந்நிலைமைக்கு நாடு வந்துள்ளது. எனவே, எமக்கு மாற்றமும், புதிய ஆரம்பமும் அவசியம் எனவும் பேராயர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

பிச்சைக்காரர்களை விட மோசமான நிலை!

நாட்டிற்கு பெரிய மாற்றத்துடன் புதிய தொடக்கம் தேவை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.நீர்கொழும்பில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கர்தினால் இதனைத் தெரிவித்துள்ளார்.

இப்போது நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து நாடகம் ஆடுவதைப் பார்க்கிறோம். இன்று நாட்டிற்கு ஒரு பெரிய மாற்றம் தேவை.இப்போது நமது வெளியுறவு அமைச்சரும் நமது நிதி அமைச்சரும் சென்று சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்க வேண்டும். நாம் வேறு நாடுகளுக்குச் சென்று கைநீட்டி பிச்சை எடுக்க வேண்டும்.

இந்தியாவைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் தான் வசூலித்த பணத்தில் சிலவற்றை இலங்கைக்குக் கொடுப்பதாக நேற்று பத்திரிகையில் பார்த்தேன்.அதாவது பிச்சைக்காரர்களை விட மோசமான நிலைக்கு விழுந்துவிட்டோம். இந்த நிலை தொடர அனுமதிக்க முடியாது.

இந்த அமைப்பை மாற்ற இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Previous Story

ஜனாதிபதி செயலகத்தில் வெளிவரும் புகையால் குழப்ப நிலை

Next Story

அலி சப்ரி அந்தர் பல்டி: நமக்கு ஏற்படும் அச்சம்!