உயிர்த்தெழும் உள்ளாட்சி சபைகள்!

-நஜீப்-

தற்போது நீதி மன்றத்தின் முன் இருக்கின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் விவகாரத்துக்குப் பின்னால் இருக்கின்ற நீண்ட கதை அல்லது சதிகள் பற்றி நமக்குத் தெரியும். அமைச்சருக்கு இருக்கின்ற சட்ட ரீதியான அதிகாரத்தை பாவித்து அதனை ஒரு வருடங்கள் ஆட்சியாளர்கள் தாமதித்தார்கள்.

Sri Lanka local council elections officially postponed - NewsWire

பின்னர் தேர்தல் அறிவிப்பு, வேட்புமனு, தேர்தல் திகதி வரை வந்து இடையில் நின்று போனது. சட்டம் நீதி பலயீனமான நாடுகளில் இதற்கும் மேலும் எதிர்பார்க்க முடியும். இப்போது இந்த உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வேட்பாளர்களின் நலன்கள் கருதி இரத்துச் செய்வது பற்றி ஒரு கதை கடந்த வாரம் வந்தது.

இப்போது புதுக் கதையாக கலைக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளை யேசுபிரான் உயிர்த்தெழுந்தது போல மீண்டும் உயிர்ப்பிக்க ஆட்சியாளர்கள் முனைவதாகத் தெரிகின்றது. அதன் மூலம் அதிக இலபம் அடைவது மொட்டுக் கட்சியினர். அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியினர்.

SLPP - UNP to reach final agreement on LG poll today

எதிர்காலத்தில் ஏதாவது தேர்தல்கள் நடக்குமாக இருந்தால் இந்த சபைகளை வைத்து அதிக இலாபத்தை ஆட்சியாளர்கள் சம்பதிக்கலாம் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அப்படி ஒரு சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு வந்தால் அதற்கு மிகப் பெரும்பான்மையானவர்கள் கைதூக்கி அதனை நிறைவேற்றிக் கொள்ள இடமிருக்கின்றது. அதன்படி அமைச்சர் விரும்புகின்ற வரை காலத்தை நீடிக்கவும் ஏற்பாடுகள் இருக்கின்றது.

நன்றி: 02.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஆழ் கடலில் ஓடும் தேசம்

Next Story

"இதுதான் ஐஎம்எப்"