நஜீப்
நன்றி: 15.03.2026 ஞாயிறு தினக்குரல்

செல்வாக்கான இணையத்தளமான லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சதருவன் சேனாதீர தற்போது நாட்டுக்கு வந்த போது விமான நிலையத்தில் வைத்துக் கைதாகி இருக்கின்றார். ஏற்கெனவே இருந்த ஒரு முறைப்பாட்டால் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிகின்றது.
இதில்தான் காணாமலாக்கப்பட்ட பிரதீப் எகனலிகொடவும் சேவையாற்றிக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜபக்ஸாக்கள் காலத்தில் கொடுக்கப்பட்ட தொந்தரவுகளால் சேனாதீர அன்று நாட்டிலிருந்து தப்பி ஓடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது சுகயீனத்துக்கு ஆயுள் வேத வைத்தியம் பார்க்கத்தான் அவர் நாட்டுக்கு வந்தார் என்றும் சொல்லப்படுகின்றது. ராஜபக்ஸாக்கள் காலத்தில் இவர் அன்று துணிச்சலுடன் மக்களுக்கு செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தார்.
இந்த லங்கா ஈ நியூஸ்தான் அன்று பரபரப்பான செய்திகளை மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.





