ஈஸ்டர் தாக்குதலுடன் ரிசாட் பதியுதீனுக்கு என்ன உறவு!

நஜீப் பின் கபூர்

ஈஸ்டர் தாக்குதல் நடந்த நாளிலிருந்து அது தொடர்பாக நாம் நிறையவே தகவல்களை சொல்லி வந்திருக்கின்றோம். இதன் மூலம் நாம் யாரையும் காட்டிக் கொடுக்கவோ கூட்டிக் கொடுக்கவோ முனையவில்லை. எமக்குக் கிடைக்கின்ற தகவல்களை நாம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம் அவ்வளவுதான்.

இந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கும் அதனை வேறு ஆட்களின் தலையில் கட்டிவிடுவதற்கும் தொடர்ச்சியான முயற்சிகள் நடந்து வந்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அரசுகள்-அதிகாரம் மாறுகின்ற போது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான கதைகளும் தலைகீழாக மாறுவதையும் நாம் பார்த்து வருகின்றோம்.

Rishad to file case against Gotabaya - Newswire

இதனால் தான் சானி அபேசேக்கர, ரவி செனவிரத்னா போன்றவர்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் தொடுத்தார்கள் என்று நீதிமன்றம் (SCFR 241/2024 வழக்கு இலக்கம்) அவர்களைக் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்திருப்பதுடன் போலி குற்றச்சாடுக்களை சோடித்த அதிகாரிகளுக்கு நஸ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் கட்ளையிட்டிருக்கின்றது.

இந்த விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீனது பெயரும் நீதி மன்றத்தில் உச்சரிக்கப்பட்டு வருகின்றது. அந்த கதைகளும் தகவல்களும் நீண்டதாக இருப்பதால் அவற்றை இங்கு குறிப்புக்களாக நாம் வாசகர்களுக்கு சொல்ல முனைகின்றோம்.

சில தினங்களுக்கு முன்னர் நாம் பத்திரிகைகளுக்கு எழுதிய கட்டுரைகளில் மன்னார் அலாவுத்தீன் என்பவருக்கும் ஈஸ்டர் தாக்குதலுக்கும் குறிப்பாக சாரா ஜெஸ்மினை (புலஸ்தீணி) இந்தியாவுக்கு படகில் எடுத்துச் சென்றது தொடர்பாக ஒத்துழைத்தது பற்றிய கதைகள் நீதிமன்றில் உச்சரிக்கப்பட்டு வருவது பற்றிய தகவலில் சொல்லி இருந்தோம்.

அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த தகவல்களும் வருகின்றன. இந்த அலாவுதீன் என்பவரின் மகளைத் தான் ஜேவிபி. தேசிய பட்டியலில் இடம் பெற்றிருந்த கொழும்பு வர்த்தகர் இப்ராஹீமின் மகன் இன்பாஸ் அஹமட் மணம் முடித்திருக்கின்றார்.

இந்த இன்பாஸ் தற்கொலைத் தாக்குதலில் மரணித்தார். அவரது மனைவியும் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் இந்த அலாவுதீன் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபே ராஜபக்ஸாவுக்கு மன்னார் பொறுப்பாளராக இருந்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் கோட்டா தேர்தலில் வென்று ஜனாதிபதியானதும் அலாவுதீன் தனது மகளை சிறையிலிருந்து சுலபமாக விடுவித்துக் கொண்டார்.

இதே அலாவுத்தீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுத்தீனுக்கும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு உதவி இருக்கின்றார். அத்துடன் சஹ்ரன் அடிக்கடி இந்திய போய்வர அலாவுத்தீனும் ரிசாடும் ஒத்துழைத்திருப்பதாக உளவுத்துறையினர் கண்டறிந்திருப்பதாக சொல்லப்படுகின்றது.

நாம் வழக்கமாக சுட்டிக்காட்டுவது போல இஸ்ரேல்-மொசாட் இலங்கை இராணுவத்துக்கும் ஈழப் போராட்ட ஆயுதக் குழுக்களுக்கும் ஒரே நேரத்தில் ஆயுதப் பயிற்சிகளை வழங்கியது போலத்தான் இந்த அலாவுத்தீனும் வேலை பார்த்திருக்கின்றார். அதனால்தான் ரிசாடுடனும் கோட்டாவுடனும் உறவைப் போண முடிந்திருக்க வேண்டும். இது கடத்தல் வியாபாரிகளின் இராஜதந்திரமாக இருக்கலாம். அதனால்தான் அலாவுதீன் உளவுத்துறையுடனும் உறவுகளைப் பேணி வந்திருக்க வேண்டும்.

அந்தவகையிலே ரிசாட் பதியுதீன் பெயரும் இந்த ஈஸ்டர் தாக்குதலில் சம்பந்தப்படுகின்றது என்று கருத முடியும்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னைய நாள் அலாவுதீன் மன்னார் வீட்டில் 40 குதிரை சக்தி கொண்ட படகும் ஸ்கூட்டர்கள் சிலவும் தயாராக இருந்ததை உளவுத்துறை உறுதி செய்கின்றது.

05.04.2019 அன்று இப்படி ஒரு தாக்குதலுக்கு சஹ்ரான் தரப்பு தயாராக இருப்பது உளவுத்துறைக்கத் தெரிய வந்திருக்கின்றது. ஆனால் அவர்கள் அது பற்றி எந்த நடவடிக்கைளும் எடுக்கவில்லை.

09. 04. 2019 திகதி உளவுத்துறை அதிகாரிகள் சஹ்ரான் தம்பிகளான ரிழ்வான் மற்றும் சைனி ஆகியோருடன் கிழக்கில் உளவுத்துறை வாகனங்களில் சுற்றித்திருந்திருக்கின்றனர்.

19.04.2019ல் தாக்குதல் நடக்கின்றது.! இது எப்படி சாத்தியம்.? இவை அனைத்தையும் அரசியல் தேவைகளுக்காக துவான் சுரேஸ் சலே நெறிப்படுத்தி இருக்கி வேண்டும் என்று நம்பப்படுக்கின்றது.

Previous Story

ශිරන්ති එන්න එපැයි- ආවම පත්තුවෙන නඩුව මේකයි

Next Story

අරවින්ද ද සිල්වා හා බිරිද අත්අඩංගුවට ගන්න නියෝග කෙරේ..!