ஈரான் கையில் பெரிய பிளான்..

அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எப்போது வேண்டுமானாலும் ஈரானை, அமெரிக்கா தாக்கும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்கா மீண்டும் தாக்கினால் மத்திய கிழக்கு நாடுகளில் இண்டர்நெட் சேவைகளை துண்டிக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் முடிவடைந்தாலும் கூட இன்னும் பதற்றம் தணியவில்லை. இருநாடுகளுக்கும் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்கா மீண்டும் ஈரானை குறிவைத்து தாக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

World Oceans Day 2025: Why Our Digital Future Depends on the Deep - Subsea Cables

உளவுத்துறை வார்னிங் இதனால் ஈரானும், அமெரிக்காவின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்கா மீண்டும் தாக்கினால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இண்டர்நெட் சேவையை வழங்கும் வகையில் கடலுக்கடியில் செல்லும் கேபிள்களை துண்டிக்க ஈரான் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதேவேளையில் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் யதோல்லா ஜவானி கூறுகையில், ”அமெரிக்கா, ஈரானின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து மீண்டும் தாக்கினால் ஹார்முஸ் ஜலசந்திக்கு அடியில் செல்லும் 7 முக்கிய இண்டர்நெட் கேபிள்களை குறிவைத்து ஈரான் துண்டிக்கும்” என்று கூறியுள்ளார்.

அதேபோல் இந்த திட்டத்தை ஈரான் நாட்டின் முக்கிய 2 அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதுபற்றி பெயர் சொல்ல விரும்பாத அதிகாரிகள் கூறியதாவது: ”கடந்த முறை அமெரிக்கா, ஈரானை தாக்கியது. அப்போது மத்திய கிழக்கு நாடுகளின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கினோம்.

Submarine Cable Map 2025

வெளியான தகவல் மீண்டும் அமெரிக்கா, ஈரானை குறிவைத்து தாக்கினால் மத்திய கிழக்கு நாடுகளின் இண்டர்நெட்டை முடக்குவோம். கடலுக்கடியில் செல்லும் இண்டர்நெட் கேபிள்கள் துண்டிக்கப்படும்.

இதனால் நெருப்புடன் விளையாட வேண்டாம். ஏனென்றால் கடலுக்கடியில் செல்லும் கேபிள்களை ஈரானால் கண்டுபிடித்து அழிக்க முடியும்” என்று வார்னிங் செய்துள்ளனர். இதன்மூலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இண்டர்நெட் சேவைகளுக்காக கடலுக்கடியில் செல்லும் வயர்களை துண்டிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த வேலையை எப்படி? எந்த இடத்தில் செய்வார்கள்? என்பது பற்றி அதிகாரிகள் எதையும் சொல்லவில்லை. ஆனால் அமெரிக்கா தாக்கினால் இண்டர்நெட் கேபிள்களை குறிவைக்க ஈரான் தயாராகி உள்ளது மட்டும் உறுதியாகி உள்ளது. அதுமட்டுமின்றி செங்கடல் பகுதியிலும் அதிகளவில் கடலுக்கடியில் இண்டர்நெட் கேபிள்கள் செல்கின்றன.

ஐரோப்பா, கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த செங்கடல் கேபிள்கள் மிகவும் முக்கியம். செங்கடல் தற்போது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கும் கூட ஹவுதிகள் உதவியுடன் ஈரான் கைவைக்க வாய்ப்புள்ளது.

The future of undersea Internet cables: Are big tech companies forming a cartel? | APNIC Blog

இது நடந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது. ஏனென்றால் ஹார்முஸை விட செங்கடல் பகுதியில் அதிக இண்டர்நெட் கேபிள்கள் செல்கின்றன. இதுபற்றி இன்னும் ஈரான் எதுவும் சொல்லவில்லை. இருப்பினும் இந்த பிளானை கூட ஈரான் கையில் எடுக்க வாய்ப்புள்ளது. இதுபற்றி தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிறுவனமான டெலிஜியோகிராஃபியின் ஆராய்ச்சி இயக்குநர் ஆலன் மால்டின் கூறுகையில், ” தற்போது கடலுக்கடியில் இண்டர்நெட் சேவைக்கான கேபிள்கள் செல்வது அதிகரித்துள்ளது.

ஐநாவின் ஓர் அங்கமாக உள்ள சர்வதேச தொலை தொடர்பு யூனியன் டேட்டாப்படி, ”உலகளவில் இண்டர்நெட் சேவையில் 99 சதவீதம் கடலுக்கடியில் செல்லும் கேபிள்கள் வழியாக தான் இருக்கிறது. இதில் 1 சதவீதத்துக்கும் குறைவான அளவு மட்டுமே ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்கிறது.

இதனால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் இண்டர்நெட் கேபிள்களில் தாக்குதல் நடத்தினால் அது உலகளவில் பாதிக்க வாய்ப்பில்லை. ஆனால் மத்திய கிழக்கில் குறிப்பிடும்படியான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

African Undersea Cables – Many Possibilities

ஆனால் செங்கடல் கேபிள்களில் கைவைத்தால் பாதிப்பு கொஞ்சம் அதிகமாகலாம்.” என்றார். ஹார்முஸ் ஜலசந்தி கடலுக்கடியில் செல்லும் இண்டர்நெட் கேபிள்களை குறிவைத்து ஈரான் துண்டித்தால் அது ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு பெரிய பிரச்சனையாக மாறும்.

இங்கு இண்டர்நெட் சேவை பாதிக்கப்படும். இல்லாவிட்டால் இண்டர்நெட் சேவையின் வேகம் குறையும். அதுமட்டுமின்றி இந்த நாடுகளில் அமெரிக்காவுடன் தொடர்புடைய டிஜிட்டல் உள்கட்டபை்புகள், டேட்டா மையங்கள், ஏஐ மையங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இது பாதிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக பணப்பரிவர்த்தனைகள்,

இ-காமர்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.

Previous Story

LIVE: ENG vs PAK, 4th

Next Story

බැසිල් කොටුවෙයි