நஜீப்
நன்றி 15.11.2026 ஞாயிறு தினக்குரல்

அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் நெடுங்கால வரலாறுகளும் உறவுகளும் இருந்து வருவது தெரிந்ததே.
ஆனால் மத்திய கிழக்கில் 1948 யூதர்களுக்கு இஸ்ரேல் தோன்றியதிலிருந்துதான் கடுமையான மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் அவை பற்றி எல்லாம் நாம் வரலாறு சொல்ல வரவில்லை. இஸ்ரேல் தேர்தலுடன் அந்த நாட்டில் பெரும் தொகையான அரேபியர்கள் இருப்பது பலருக்குத் தெரிய வந்திருக்கின்றது.
1.இஸ்ரேலில் இருக்கின்ற ஒரு கோடி மக்கள் தொகையில் யூதர்கள் ஏழு மில்லியன்கள். அரேபியர் 2.1மில்லியன்கள். ஏனையோர் .7மில்லியன்.
2.அதே போன்று காசாவில் 2.1 மில்லியன் அரேபியர்கள். சிறு எண்ணிக்கையில் கிருஸ்தவர்கள் இருக்கின்றார்கள்.
3.மேற்குக்கரையில் 3.5 மில்லியன் அரேபியர்கள். அங்கும் சிறு எண்ணிக்கையில் யூதர்களும் கிருஸ்தவர்களும் இருக்கின்றார்கள்.
காசா மேற்குக்கரை என்பவற்றில் அரபுகளின் நிருவாகம் நடைபெறுகின்றது. ஒட்டு மொத்தமாகப் பார்க்கின்ற போது இஸ்ரேலில் அரேபியர்களும் யூதர்களும் சமமாகவே வாழ்கின்றார்கள்.





