நஜீப்
நன்றி: 17.05.2026 ஞாயிறு தினக்குரல்
கருணாநிதியுடன் முரண்பட்ட எம்.ஜீ.ஆர். புதுக்கட்சி துவங்கியது முதல் அவருடன் நெருக்கமாக இருந்தவர்தான் தற்போதய தமிழக சபாநாயகர் பிரபாகரர். 1980 தேர்தலில் வில்லிவாக்கத் தொகுதியில் வேட்பாளராக இவரை எம்ஜிஆர். களத்தில் இறக்கினார்.
பிரபாகரர் மிகவும் விசுவாசமாக நடந்து கொள்ளும் ஒரு நல்ல மனிதன். பிரபாகரரின் இந்த செயல்பாடுகள் எம்ஜீஆருக்கு மிகவும் பிடித்திருந்தது.

வில்லிவாக்க தேர்தல் பிரசாரத்தில் இவரை ஆதரித்துப் பேசிய எம்ஜீஆர். எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால் நான் பிரபாகரருக்குத்தான் அவளைக் கட்டிக் கொடுத்திருப்பேன் என்று பகிரங்கமாகவே பேசி இருந்தார்.
எனது பெற்றோர் எல்லா இடங்களில் நல்ல பெயர் வாங்க வேண்டும். நமக்கு சொந்தமில்லாத எந்த உடமைகளும் நமது வாசல்படிக்கு எடுத்து வரக்கூடாது என்று என்னை எச்சரித்திருந்தார்கள்.
அத்துடன் புரட்சித் தலைவர் கற்றுத் தந்த பாடங்கள்தான் எனக்கு இந்த நல்ல பெயரை வாங்கித்தருகின்றது என்கிறார் சபாநாயகர் பிரபாகர்.





