இலங்கை பொருளாதாரம்: ப்ளூம்பெர்க்  எச்சரிக்கை

அடுத்த நிதியாண்டில் இலங்கையின் பொருளாதாரத்தில் மேலும் மந்தநிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ப்ளூம்பெர்க் இன்று(26) வெளியிட்டுள்ள கணிப்பீட்டு அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

Sri Lankan economic crisis

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கை மாத்திரமல்லாமல், சில ஆசிய நாடுகளும் பொருளாதார மந்தநிலையை சந்திக்கும். கணப்பீட்டின்படி, ஏற்கனவே பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கும் இலங்கை, 2023ஆம் நிதியாண்டில் பொருளாதார மந்தநிலைக்கு செல்லக்கூடிய நிகழ்தகவு 85வீதமாக உள்ளது.

முன்னைய கணிப்பீட்டின்படி, இது 33 வீதமாக மாத்திரமே அமைந்திருந்தது.

சீனா மந்தநிலையை அடைவதற்கான நிகழ்தகவு 20 வீதமாகவும், தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மந்த நிலைக்கு செல்லும் நிகழ்தகவு 25வீதமாக அமைந்துள்ளது.

நியூசிலாந்து, தாய்வான், அவுஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் முறையே 33 சதவீதம், 20 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 8 சதவீதம் ஆகும்.

மந்தநிலை

இந்தநிலையில் பொருளாதார மந்தநிலையில் இருந்து மீட்சிப்பெறுவதற்காக நாடுகளின் மத்திய வங்கிகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன.

இலங்கை பொருளாதாரம் தொடர்பில் ப்ளூம்பெர்க் விடுத்துள்ள எச்சரிக்கை | Bloomberg S Warning About The Sri Lankan Economy

ஆசியாவின் மந்தநிலையின் ஆபத்து சுமார் 20-25 சதவீதமாக உள்ள நிலையில் அமெரிக்காவுக்கான ஆபத்து நிகழ்தகவு 40 வீதம் .

ஐரோப்பாவுக்கான பொருளாதார மந்த நிலலை ஆபத்து நிகழ்தகவு 50-55 சதவீதமாக உள்ளது” என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.tw

Previous Story

 GOTA GO:மூளை சந்திரிக்கா! 

Next Story

“வெட்கித் தலைகுனிந்து மன்னிப்புக் கேட்கிறேன்” - கனடாவில் போப் பிரான்சிஸ்