இரு தேர்தலும் ஒன்றாக!

-நஜீப்-

ரணிலிடம் ராஜபக்ஸாக்கள் கேட்டுக் கொள்கின்ற படி பொதுத் தேர்தலை முன்கூட்டி நடாத்துவதற்கு இன்று வரை அவர் தயாராக இல்லை. இதனால் இப்போது ஜனாதிபத் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒன்றாக நடாத்துவது பற்றி அவர்கள் பேசி வருவதாக நமக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

அப்படி அமையுமாக இருந்தால் இது ஒரு வரலாற்றுப் பதிவாக அமையும். ஆனால் இப்படி இரு தேர்தல்களையும் ஒரு தினத்தில் நடாத்தினால் வேட்பாளர்கள் பெரும்பாலும் தமது தனிப்பட்ட வெற்றி வாய்ப்புத் தொடர்பாகத்தான் ஒடித் திரிவார்கள்.

இது ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆரோக்கியமான ஒரு தெரிவு அல்ல. ஜேவிபி. யினர்தான் இந்த முறையில் அதிக வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள இடமிருக்கின்றது. அவர்கள் கூட்டாக இணைந்து காரியம் பார்ப்பதில் வல்லவர்களாக இருப்பதால் அவர்களுக்குத்தான் இதில் அதிக அறுவடைக்கு வாய்ப்பும் வரும்.

அடுத்து இப்படி இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடாத்துவது தேர்தல் முடிவுளைத் தொடர்ந்து நாட்டின் ஒரு வன்முறைக்குக் கூட வாய்ப்பு வரலாம். இதனைத்தான் ஆட்சியாளர்கள் விரும்புகின்றார்களே என்று சந்தேகிக்க வேண்டி இருக்கின்றது.

 நன்றி: 07.04.2024 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

மொட்டுக் கூட்டமும் குழப்பமும்! 

Next Story

அனுர - சஜித் விவாதம்!