இருபெரும் நெருப்பு!

நஜீப்

நன்றி: 09.02.2025 ஞாயிறு தினக்குரல்

Nandana Weerarathne

நந்தன வீரரத்ன ஜனரஞ்சக ஊடகவியலாளர். அவர் தற்போது நாட்டுக்கு வந்து சிங்கள மொழியில் தான் எழுதிய ‘படலந்த கிளிலேம’ மற்றும் ‘யாப்பண கினிதெபீம’ என்ற இரு நூல்களையும் படலந்த நெருப்பும், யாழ் நூலகத் தீ முட்டால் என்ற தமிழாக்கங்களுடன்

இந்த நாட்களில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி, முல்லை, கிளிநொச்சி திருகோணமலை பதுள்ளை நுவரெலிய கண்டி என்று சந்திப்புக்களுக்காக சுற்றி வருகின்றார்.

அதன் வெளியீடுகளும் அங்கு நடக்கின்றன. அவருடன் இந்த நூலை தமிழாக்கம் செய்த மனோ ரஞ்சன் என்பவரும் கனடாவில் இருந்து வந்து நந்தனவுடன் இணைந்து பயணிக்கின்றார். ஒரு சந்திப்பில் கேள்வி கேட்கும் நேரம். யாரும் முன்வரவில்லை.

அப்போது நந்தன அங்கிருந்தவர்களிடம் இங்குள்ள மக்கள் எப்போதும் ஜனாதிபதித் தேர்தல்களில் வரைபடத்தை பச்சையாக்கிவிடுவது ஏன் என்று கேட்க, எமக்கு இதுவரை வேறு தெரிவுகள் இருக்கவில்லை, அதனால் தீ மூட்டியவர்களுக்கே எங்கள் வோட்டு என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

Previous Story

பிஸியான சாலையில் சட்டென சரிந்த விமானம்!

Next Story

சட்டத்தின் அதிரடி!