இரட்டைக் குடியுரிமை  தொடர்பில் பசில் 

இரட்டைக் குடியுரிமையை நீக்க முடியாது என பசில் ராஜபக்ச தன்னிடம் தெரிவித்ததாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரட்டைக்குடியுரிமையை நீக்குவது தொடர்பில் பசில் ராஜபக்ச வெளியிட்டுள்ள தகவல் | Basil Rajapaksa Dual Citizenship Issue

இரட்டைக்குடியுரிமை

நான் பசில் ராஜபக்சவை அழைத்து 22 தொடர்பில் கலந்துரையாட வருமாறு அழைப்பு விடுத்தேன். என்ன செய்வது என்றும் கேட்டேன்.

இருப்பினும் தமக்கு போர் குற்றவிசாரணை தொடர்பில் சில பிரச்சினைகள் உள்ளமையினால் தனது இரட்டைக்குடியுரிமையை இரத்து செய்ய முடியாது என கூறினார்.

மேலும் தன்னை பற்றி கட்சியினர் ஒருபோதும் சிந்திக்காது முடிவெடுத்துள்ளமையினால் தன்னால் இரட்டைக்குடியுரிமையை இரத்து செய்ய முடியாது எனவும் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Story

இன்றைய போராட்டம் NOV.02

Next Story

"ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்" - கொழும்பில்  திரண்ட மக்கள்