இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டது ஏன்? கைதான நபர் ஷாக் வாக்குமூலம்..

பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்துள்ளது. இது பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் தான் இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டது ஏன் என்பது பற்றி அந்தநபர் ஷாக் வாக்குமூலத்தை கொடுத்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். இவர் தலைமையில் அந்நாட்டு கிரிக்கெட் அணி உலககோப்பை வென்றது. இதன்மூலம் அவரது புகழ் உச்சத்துக்கு சென்றது.

அதன்பிறகு இம்ரான் கான் பாகிஸ்தான் தெக்ரி இ-இன்ஷெப் (பிடிஐ)கட்சியை துவங்கி நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2018 ல் மக்களவை தேர்தல் நடந்தது.

யார்? “கொலை முயற்சி!”

மறைந்திருந்த பல முறை சுட்ட இளைஞர்.. அப்படியே சரிந்த இம்ரான் கான்.. மோசமான காயம் பிரதமர் பதவியை இழந்த இம்ரான் கான் மொத்தம் 342 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 172 இடங்கள் தேவை. இதில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரி இ-இன்ஷெப் கட்சி 155 இடங்களில் வென்றது.

இதையடுத்து பிற கட்சிகளுடன் அவர் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார். இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்று வந்தார். இந்த ஆண்டு துவக்கத்தில் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து இம்ரான் கானுக்கு கொடுத்த ஆதரவுகளை சில கட்சியினர் வாபஸ் பெற்றனர்.

இதையடுத்து இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் தோல்வியடைந்த நிலையில் இம்ரான் கான் ஆட்சியையும், பிரதமர் பதவியையும் இழந்தார். ஆளும் கட்சி மீது கடும் விமர்சனம் இதையடுத்து புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.

இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தம்பி ஆவார். இந்நிலையில் தான் ஷெபாஸ் ஷெரீப் வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்த்ததாக இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் பாகிஸ்தானில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க முடியாமல் ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி திணறுகிறது.

இதனை சாதகமாக பயன்படுத்தி இம்ரான் கான் ஆளும் கட்சியை சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறார். இம்ரான் கான் கட்சி பேரணி இந்நிலையில் தான் பாகிஸ்தானில் மீண்டும் தனது செல்வாக்கை மேம்படுத்தும் வகையில் இம்ரான் கான் தலைமையில் அவரது கட்சி பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணியை நடத்தி வருகிறது.

அந்த வகையில் தான் இன்று பாகிஸ்தானின் வஜிராபாத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக இம்ரான் கான் பிரமாண்ட பேரணியை துவங்கியது. இதில் இம்ரான் கான் கலந்துகொண்டார். கண்டெய்னர் மீது நின்று இம்ரான் கான் கட்சியினர் இடையே பேசி கொண்டிருந்தார். இம்ரான் கான் மீது பாய்ந்த குண்டு இந்த வேளையில் அவரை நோக்கி மர்மநபர் பலமுறை துப்பாக்கியால் சுட்டார். இதில் இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்தது.

மேலும் 4 பேர் மீதும் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்தன. இதையடுத்து உடனடியாக அவர்கள் 5 பேரும் காரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இம்ரான் கான் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.

கைதான நபர் கூறிய ஷாக் தகவல் இதற்கிடையே தான் இம்ரான் கான் உள்ளிட்டவர்களை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் தான் அந்த நபர் கேமரா முன்பு சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.

அதில் இம்ரான் கானை சுட்டு கொல்வதற்காக வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அந்த நபர், ‛‛இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார். இதனால் அவரை கொலை செய்ய வந்துள்ளேன்” எனக்கூறியுள்ளார்.

இந்நிலையில் கைதான நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நபரின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

பதற்றமான சூழல் இந்நிலையில் தான் இம்ரான் கான் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அவரது கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது ஒரு கோழைத்தனமான தாக்குதல்.

இதன் பின்னணியில் ஆளும் கட்சியின் சதி இருக்கலாம் என இம்ரான் கான் கட்சியை சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பாகிஸ்தானில் தற்போது பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Previous Story

30 வது SLMC தேசிய மாநாடு

Next Story

ஜினாத்தின் ஜனாஸா நல்லடக்கம்