இம்ரான் கானுக்கு ஆபத்து!

பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் அதிகரித்து வரும் நிலையில், இம்ரான் கான் பதவி பறிபோகும் அபாயம் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஏற்கனவே இருந்த கடன் சுமையும் பாக். நாட்டில் நிலைமையை மோசமாக்கி உள்ளது

இதை இம்ரான் கான் அரசு சரி செய்யும் என்ற நம்பிக்கை அந்நாட்டு மக்களிடையே முதலில் இருந்தது. இருப்பினும், நிலைமை சரியாகவில்லை.  திடீர் பரபரப்பு! டெல்லியில் இருந்து தோஹா கிளம்பிய விமானம்.. திடீரென பாகிஸ்தானில் தரையிறங்கியது பிரதமர் இம்ரான் கான் இதற்கிடையே பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைத் தாக்கல் செய்துள்ளன.

இந்த தீர்மானத்தின் மீது வரும், 28ஆம் தேதி வாக்கெடுப்பு நடக்கிறது. உட்கட்சியிலேயே இம்ரான் கான் மீதான எதிர்ப்பு அதிகரித்து வருவதால், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது சிக்கல் மிகுந்ததாக மாறி உள்ளது.

சுமார் 22 எம்பிக்கள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பி உள்ளதாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. ராஜினாமா இந்நிலையில், அதிகாரமாகப் பாகிஸ்தான் ராணுவமும் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பாக். நாட்டில் இப்போது நிலவும் அரசியல் குழப்பம் நாட்டுக்கு நல்லதில்லை என்பதால் இம்ரான் கான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவம் கருதுகிறது. இதனால் சபாநாயகர் தீர்மானத்தை எடுத்துக் கொண்டால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் எளிதாக நிறைவேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச் சபாநாயகர் ஏற்க மறுத்தால் அவையை முடக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர். பாக். ராணுவம் அரசியல் குழப்பத்தைத் தாண்டி, உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை இம்ரான் கான் கையாண்ட விதமும் பாக், ராணுவத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் கமர் பஜ்வா மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் நதீம் அஞ்சும் என இருவரும் இம்ரான் கான் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். வரும் மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாடு நடைபெறும் நிலையில், அதைத் தொடர்ந்து இம்ரான் கான் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜினாமா அதேநேரம் இம்ரான் கான் தனது அதிபர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள இறுதி வரை போராடி வருகிறார். முன்னதாக சமீபத்தில் தான் அவர் பாக். முன்னாள் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப்பை சந்தித்து இருந்தார். இருந்தாலும் கூட, ராணுவத்தில் இருக்கும் அனைத்து முக்கிய உயர் அதிகாரிகளும் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதால் ராணுவத் தளபதியுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

வேறு வழியில்லை இதனிடையே ராணுவ தளபதி ஜெனரல் பஜ்வாவை பாக். பிரதமர் இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், அரசியல் குழப்பம், பொருளாதார பிரச்சினை என உள்ளிட்டவற்றை இம்ரான் கான் கையாண்ட முறையால் அனைத்து ராணுவ உயர் அதிகாரிகளும் கடும் அதிருப்தியில் உள்ளதால், இம்ரான் கான் பதவியை யாராலும் காப்பாற்ற முடியாது என்றே கூறுகின்றனர்.

Previous Story

அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி அடித்துக் கொலை

Next Story

தமிழீழத்தை அமைப்பதற்கு திட்டம்!