இப்படியும் ஒரு கணக்கு!    

       நஜீப்

ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு வெள்ளி நடத்திய இலங்கைக்கு எதிரான பிரேரனை ஆதரவாக 20 நாடுகளும் எதிராக ஏழு நாடுகளும் வாக்களித்திருந்தன. எதிர்த்து வாக்களித்த அனைத்து நாடுகளும் ரஸ்யா அல்லது சீன ஆதரவுப் போக்குடைய நாடுகள்.

அதே நேரம் இந்தப் பிரேரணையின் போது வாக்களிப்பை தவிர்த்த நாடுகளின் எண்ணிக்கை 20. வழக்கம் போல இலங்கயில் உள்ள சில அரசியல்வாதிகள் எதிராக வாக்களித்தவர்களையும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவர்களையும் சேர்த்து தாம் வெற்றி பெற்றிருப்பதாகவும் கணக்கு சொல்ல இடமிருக்கின்றது.

என்னதான் இருந்தாலும் இந்த வாக்களிப்பின் போது வழக்கம் போல இந்தியா வாக்களிப்பை தவிர்த்து வருவது இலங்கைக்கு கிடைத்த பெரு வெற்றியாகவே பார்க்க வேண்டும். இந்த பிரேரணையின் போது இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்ப்பில் இருக்கமான வார்த்தைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

சர்வதேசம் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவ வேண்டுமாக இருந்தால் அரசு குடிமக்களுக்கு எதிரான நடாத்திக் கொண்டிருகின்ற வன்முறையை முற்றாகத் தவிர்க்க வேண்டும். நீதிதுறை நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் அரச களவுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கேட்கப்பட்டிருக்கின்றது.

நன்றி:09.10.2022 ஞாயிறு தினக்குரல்

 

 

Previous Story

காலி முகத்திடலில் ஏராளமானோர் கைது

Next Story

கண்டவுடன் காதல்: முகலாய மன்னர் ஒளரங்கசீப் - ஹீராபாய் காதல் வரலாறு