நஜீப்
நன்றி:09.08.2026 ஞாயிறு தினக்குரல்
தமிழ் பேசும் கட்சிகள் கடந்த வாரம் ஜனாதிபதியை சந்தித்த கையோடு சஜித்தையும் சந்தித்தார்கள். இது மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலும் தந்திரம். தன்னிடம் வந்தவர்களிடத்தில் ஜனாதிபதி இன ரீதியில் சிந்திக்காது தேசிய ரீதியில் கருத்துக்களை முன்வைக்குமாறு விடுத்த வேண்டுகோளை அனைவரும் ஏற்றுக் கொண்டார்களாம்.!
வடக்கு கிழக்கில் காணி இருப்புத் தொடர்பான பிரச்சினைகள், இருப்பது உண்மை. அது இன்று நேற்று உருவானதல்ல. அதே போன்று மலையக மக்களுக்கும் நிறையவே பிரச்சனைகள் இருக்கின்றன.
கடந்த ஆட்சியாளர்களை விட அனுர அரசு தமது விடயத்தில் துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொள்வது மலையக சமூகத்துக்கு நன்றாகவே தெரியும்> இவர்கள் பேசி ஏதும் வேகாது?
ஆனால் முஸ்லிம்கள் சார்பில் என்ன கோரிக்கைகளை தனித்துவங்கள் விடுத்ததோ தெரியவில்லை.! மாலை சஜித்தை சந்தித்தவர்கள் வெளியே வந்து நாம் தேசிய ரீதியில் சிந்திக்க வேண்டும் என்று வொயிஸ் கட் கொடுத்தார்கள். நல்ல முன்னேற்றம் வாவ்.!




