இன்னும் ’மெயின்’ ஆயுதத்தையே எடுக்கல-ஈரான்

மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரான் தனது ராணுவத் திறனைப் பற்றி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடைபெற்று வரும் மோதல் நீண்ட காலம் தொடர்ந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

ஈரானின் சிறப்பு ராணுவ அமைப்பான ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை வெளியிட்ட தகவலின்படி, தற்போதைய போர் சூழ்நிலையில் குறைந்தது ஆறு மாதங்கள் வரை தீவிரமான போரில் ஈடுபடக்கூடிய ராணுவ திறன் ஈரானுக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை ஃபார்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாகப் பேசியுள்ள ஐஆர்ஜிசி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி,” ஈரானின் ஆயுதப்படைகள் தற்போது நடைபெறும் போரின் வேகத்திலேயே குறைந்தது ஆறு மாதங்களுக்கு தீவிரமான போரை தொடரும் திறன் கொண்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

Iran US Israel

ஈரான் போர்

மேலும், சமீப காலமாக நடைபெற்ற தாக்குதல்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்புடைய ராணுவ தளங்கள் மற்றும் வசதிகளை குறிவைத்து 200-க்கும் மேற்பட்ட இடங்கள் தாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரான் தனது தாக்குதல் திறனை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பெரிய அளவில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. அந்த தாக்குதலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர், இரண்டு விமானக் கப்பல்கள், 200 மேம்பட்ட போர் விமானங்கள், ஏவுகணை ஏந்தும் கப்பல்கள் மற்றும் அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டது.

அலி முகமது நைனி

இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் ஈரானில் ஆட்சியை மாற்றுவதாக இருந்தது. ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எடுத்த இந்த நடவடிக்கைகள் பல துறைகளில் தோல்வியடைந்தது. ஈரானின் அரசியல் அமைப்பு, ராணுவ திறன் மற்றும் சமூக அமைப்பை எதிரிகள் சரியாக புரிந்து கொள்ளாததால் இந்த தவறான கணிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானின் ஆயுதப்படைகள் இந்த போர் சூழ்நிலையில் பல முக்கிய இலக்குகளை அழித்தது.

அமெரிக்கா இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

குறிப்பாக அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஏழு அதிநவீன ரேடார் அமைப்புகள் மற்றும் Terminal High Altitude Area Defense (THAAD) பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டது. எதிரி நாடுகள் பயன்படுத்திய 80-க்கும் மேற்பட்ட மேம்பட்ட ட்ரோன்களையும் ஈரான் ராணுவம் அழித்துள்ளது. இந்த போர் உலகளாவிய பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உலக சந்தையில் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஐஆர்ஜிசி ராணுவ திறன்

இந்த போரின் காரணமாக சுமார் 23,000 சர்வதேச விமானங்கள் பாதிக்கப்பட்டது. கோடிக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கினர். ஈரான் இதுவரை பயன்படுத்திய ஏவுகணைகள் பெரும்பாலும் பழைய தலைமுறையைச் சேர்ந்தவை. 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை ஏவுகணைகளே அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட புதிய தலைமுறை ஏவுகணைகள் இன்னும் பயன்படுத்தப்படவில்லை.

ஏவுகணை உற்பத்தி

சமீப ஆண்டுகளில் ஈரான் ஏவுகணை உற்பத்தியை கணிசமாக அதிகரித்துள்ளது. தேவையான சூழ்நிலை ஏற்பட்டால் அந்த நவீன ஆயுதங்களையும் பயன்படுத்த தயாராக இருக்கிறோம். மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க ஈரானுக்கு முழு உரிமை இருக்கிறது. எதிரிகள் மீது முழுமையான தண்டனை வழங்கப்படும் வரை இந்த போரை ஈரான் தொடரும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Previous Story

ஹோடல் செய்யும் சந்திரிகா!

Next Story

அமெரிக்கவை நொறுக்கிய ஈரான்..!