இனவாதிகளின் முதுகெலும்பை முறித்ததே அணுரகுமார தான்!

கடந்த காலங்களில் இனவாதத்தை முன்னிருத்தி தேர்தல் பரப்புரை செய்த ஒழுங்கு இந்த முறை கணிசமாக குறைந்துள்ளது அல்லது இல்லாமல் போய் இருக்கின்றது.

இதற்கு அடிப்படைக் காரணம் என்பிபி-ஜேவிபி முன்னெடுத்துச் சென்ற இனவாதத்துக்கு எதிரான பரப்புரைகளும் அது தொடர்பாக மக்களைத் தெளிவுபடுத்தியதும் தான். இதனை யாரும் மறுக்க முடியுமா?

Sri Lanka: Muslim refugees fear repercussions after jihadist attacks | DW Stories

இதனால்தான் இந்த நாட்டில் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் மிகவும் சுதந்திரமாக இன்று நாட்டில் நடமாட முடிகின்றது. ஆனால் இந்த இனவாதிகள் இப்போது பெரும்பாலும் சஜித் முகாமில் வந்து குடியேறி இருக்கின்றார்கள்.

Anti-Muslim Violence; Conspiracy Against Relations Between Sri Lanka And Muslim Countries - Pakistan Observer - Colombo Telegraph

ஞானசாரர் கூட சஜித்துக்கு ஆதரவாம்!

எனவே சஜித் அதிகாரத்துக்கு வந்தால் மீண்டும் இந்த இனவாதிகள் செயல்பாடுகள் தீவிரமடைய அதிக வாய்ப்புக்கள் ஏற்படும் என முஸ்லிம்களிடத்தில் ஒரு அச்சம் நிலவுகின்றது. இது சஜித்தின் வெற்றி வாய்ப்பில் கடுமையான தாக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்க முடியும்.

அத்துடன் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளுக்குத் தலைமைத்துவம் கொடுத்த சம்பிக் ரணவக்க அந்த அணியில் பிரதமர் பதவிக்கு வர வாய்ப்புக்கள் இருக்கின்றன.

On the Presidential Pardon: Reactions to Gnanasara's Release - Groundviews

இந்த இனவாதிகள் அணியில் முஸ்லிம்களின் தனித்துவம் பாதுகாப்பு உரிமைகள் பற்றிப் பேசுகின்ற முஸ்லிம் தலைவர்களும் அமர்ந்திருப்பதும் விமர்சனத்துக்கு இலக்காகி இருக்கின்றது.

இது அவர்களின் சமூகத்தின் மீதான போலிப் பாசத்தை காட்டுகின்றது. இவர்களது நாடகத்தை முஸ்லிம் புத்திஜீவிகள் சமூகத்துக்குத் தெளிவு படுத்த வேண்டும்.-

Previous Story

முஸ்லிம்கள் தலையில் கொம்பு என கருதும் நமது தலைவர்கள்

Next Story

ஜனாதிபதித் தேர்தலில் இறுதிக் கட்ட சமர்! வதந்திகளும் சந்தேங்களும்