இந்தியாவுக்காக விளையாட வேண்டும் -விராட் கோலி

The Captain of the Indian Cricket Team, Virat Kohli and noted actor Anushka Sharma calls on the Prime Minister, Shri Narendra Modi, in New Delhi on December 20, 2017.

 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடும் இந்திய டெஸ்ட் அணியை தேர்வு செய்ய 1. மணி நேரத்துக்கு முன்புதான் தேர்வுக் குழுவினர் தம்மிடம் சொன்னார்கள் என்று விராட் கோலி கூறியுள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டனாக இருந்த விராட் கோலி டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து மட்டும் விலகுவதாக டி20 உலகக்போப்பை தொடர் தொடங்கும் முன்னர் அறிவித்தார்.

ஆனால், விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக இருந்தால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் ஆகிய இரண்டு ‘ஒயிட் பால்’ ஃபார்மட்டில் இருந்தும் விலக வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கூறியது.

அதன்பின், ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பொறுப்புக்கு ரோஹித் சர்மாவை நியமித்தது பிசிசிஐ.இன்றைய செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி கூறிய முக்கிய கருத்துகள் இங்கே.இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்கிற நோக்கத்திலிருந்து என்னை எதுவும் திசைதிருப்ப முடியாது. என் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயத்தை சிறப்பாகச் செய்யவும், தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன்.

  • டெஸ்ட் அணியை முடிவு செய்வதற்கான கூட்டத்திற்கு கடைசி நேரத்தில்தான் அழைக்கப்பட்டேன். கூட்டத்தின் முடிவில் ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து என்னை விடுவிப்பதாகக் தேர்வுக்குழு கூறியது.
  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு (பிசிசிஐ) நான் எந்த ஓய்வும் கேட்கவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட தயாராக உள்ளேன்.
  • எனக்கும் ரோஹித்துக்கும் எவ்வித பிரச்னையும் இல்லை. இதை 2 ஆண்டுகளாக கூறி, சோர்ந்துவிட்டேன்.
  • தலைமைப் பொறுப்பிலிருந்து வெளியேறிய பின் என்னால் சிறப்பாக செயல்பட முடியுமா, இல்லையா என்பதைக் குறித்து என்னால் எந்தவித கருத்தும் கூற முடியாது என்று கருதுகிறேன்.
  • இதை யாராலும் கணிக்க முடியாது என்றே கருதுகிறேன். இந்திய அணியில் கேப்டனாக செயல்பட்டதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். அணிக்கு என்னால் என்ன சிறப்பாக செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறேன்.
  • அணிக்காக விளையாட வேண்டும் என்கிற நோக்கம் எப்போதும் குறையாது. எப்போதும் போல அணிக்காக விளையாட தயாராக இருப்பேன்.
  • என் பொறுப்புக்கு நான் உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தேன், என் சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதை செய்தேன் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். அது தான் ஒருநாள் மற்றும் டி20 தலைமைப் பொறுப்பு குறித்து என் மதிப்பீடு.
  • ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியை சரியான வழியில் அழைத்துச் செல்வது ஒரு மூத்த வீரராக என் பொறுப்புகளில் ஒன்று, இதை நான் இந்திய அணியில் தலைவர் பதவிக்கு வருவதற்கு முன்பும் செய்திருக்கிறேன். அந்த மனநிலை இன்றுவரை மாறவில்லை, அது எப்போதும் மாறாது.
  • ரோஹித் ஷர்மா ஒரு திறமையான தலைவர் என்பதை அவர் இந்திய அணியைத் தலைமை தாங்கி வழிநடத்திய போதும், ஐபிஎல் போட்டிகளிலும் பார்க்க முடியும்.
  • ராகுல் டிராவிட் மிகவும் சமநிலை கொண்ட பயிற்சியாளர். மனிதர்களை பிரமாதமாக நிர்வகிக்கக் கூடியவர். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருவருக்கும் என் முழுமையான ஆதரவு உண்டு என கூறினார் விராட் கோலி.
Previous Story

இலங்கை கடன் பொறி!  சீனாவா? மேற்குலக?

Next Story

புஷ்பா!'ஓ சொல்றியா!'?