ஆஸ்கர் பரிசு: 60 ஐட்டங்களாம்!

ஆஸ்கர் பரிசு தொகுப்பில் என்னென்ன பரிசு பொருட்கள் இருக்கும் என்பதை பற்றி தெரியுமா? 95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டோல்பி தியேட்டரில்  தியேட்டரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் 5 விருதுகளைத் தட்டிச்சென்றது.

இதில் நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கரை வென்றார். தமிழ் ஆவணப்படமான ‘தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்’ படமும் சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறது. இந்த படம் தமிழகத்தில் உள்ள முதுமலை காட்டில் எடுக்கப்பட்டது.

7 விருதுகள்

அது போல் Everywhere Everywhere All at Once எனும் படம் 7 விருதுகளை அள்ளிச் சென்றது. இது போல் ஆஸ்கர் விருது பெறுவோர் மட்டுமின்றி முக்கிய பிரிவுகளில் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றோருக்கு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்தாண்டு இந்திய மதிப்பில் ரூ 1 கோடி SRI LANKA மதிப்பில் ரூ4 கோடி  பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

வேடிக்கை

பரிசு தொகுப்பு லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த அந்த நிறுவனம் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இந்த பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இந்தாண்டு சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, நடிகர், துணை நடிகை, நடிகர் உள்ளிட்ட பிரிவுகளில் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளோருக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

60 பொருட்கள்

இந்த தொகுப்பில் 60 பொருட்கள் இருக்கும். அவற்றில் கனடாவில் 4 ஆயிரம் டாலர் மதிப்பில் லைப்ஸ்டைல் எஸ்டேட்டில் வசிக்க வாய்ப்பு கிடைக்கும். இத்தாலியில் உள்ள லைட் ஹவுஸில் 8 பேர் வரை விடுமுறை பார்ட்டிக்கான வாய்ப்பு, ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் 79.59 டாலருக்கு ஒரு சதுரமீட்டர் நிலம் வழங்கப்படும். வேடிக்கை இடமா என ஆச்சரியப்படாதீர்கள்.

பரிசு தொகுப்பு

இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்களால் அந்த இடத்தை பயன்படுத்த முடியாது. ஆஸ்கர் வெற்றியாளர்கள் சார்பில் இரு மரங்களை மட்டுமே நடலாம். இது போல் வெற்றியாளர்கள் மரங்களை நடுவதால் எதிர்காலத்தில் மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது போன்று மரம் நடுவதால் குயின்ஸ்லாந்து செழிப்பாகவும் பசுமையாகவும் இருக்கும் என்பதால் அந்த நிறுவனம் இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளது.

 60 பொருட்கள்

மரம் நடும் ஒப்பந்தம் இது போல் குயின்ஸ்லாந்தில் மரம் நடும் ஒப்பந்தத்தை அனைத்து ஆஸ்கர் வெற்றியாளர்களும் பின்பற்றியே ஆக வேணடும். ஆஸ்கர் பிரபலங்கள் தங்கள் வீடுகளை மறுசீரமைக்க கூப்பன் வழங்கப்படும். 25 ஆயிரம் டாலர் இந்த சீரமைப்புக்காக கொடுக்கப்படும்.

அதோடு இலவச பேஷியல் சிகிச்சை, பீட்டாவின் தலையணைகள், பட்டுத்துணி விரிப்பு, வெள்ளை சாக்லேட்டால் செய்யப்பட்ட பிஸ்கெட்டுகள், ஜப்பானின் ஜின்சா நிஷிகவா ஃபிரெட், மசாஜ் எண்ணெய், ஒயின், பல்வேறு பிராண்டுகளில் அழகு சாதன பொருட்கள் ஆகியவை இருக்கும்.

வேண்டாம் என சொல்லலாம்

வேண்டாம் என சொல்லலாம்

இவையனைத்தும் ஆஸ்கர் குழுவின் அதிகாரப்பூர்வ பரிசு பொருட்கள் இல்லை. இவற்றை வேண்டாம் என சொல்லும் உரிமை விருதாளர்களுக்கு உண்டு. கடந்த 2016 ஆம் ஆண்டு பரிசுத் தொகுப்பில் இஸ்ரேலுக்கு சுற்றுலா செல்வதற்கான கூப்பன் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அது போல் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட சோப்பு கட்டிகள், இ சிகரெட் ஆகியவை கடந்த 2020 ஆம் ஆண்டு விலைமதிப்புள்ள பரிசுகளாக சொல்லப்படுகின்றன.

Previous Story

பலர் சேர்ந்து 1 ஆண்டில் செய்யும் வேலையை.. ஒரே நாளில் முடித்த ஏஐ.. சீன ராணுவம்

Next Story

உடதலவின்ன வைத்தியசாலையைப் பாதுகாக்க சக்காத் நிதியம் உதவி