செய்தி ஆப்: குண்டு வெடிப்பில் 9 குழந்தைகள் பலி January 12, 2022 ஆப்கானிஸ்தானில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்தனர்; நான்கு பேர் காயமடைந்தனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான் பயங்கரவாத அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள நாகர்ஹர் மாகாணத்தின் லாலோபர் மாவட்டத்தில், தானியங்களுடன் மாட்டு வண்டி நேற்று சென்றது. அந்த பாதையில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி மாட்டு வண்டியின் சக்கரத்தில் பட்டு வெடித்துச் சிதறியது. இந்த குண்டுவெடிப்பில் ஒன்பது குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in March 12, 2026March 12, 2026 மொசாட் உளவாளிகள் பற்றி அதிரடித் தகவல்கள்! March 12, 2026March 12, 2026 ஈரானின் முக்கிய KHARG ISLAND March 12, 2026March 12, 2026 Mosquito Fleet Vs Ghost Fleet March 12, 2026March 12, 2026 ஈரானின் 42-வது அலைத் தாக்குதல் ஆரம்பம் March 12, 2026 ஈரான் போட்ட இறுதி எச்சரிக்கை! March 12, 2026March 12, 2026 පාස්කු ප්රහාරය ගෝඨාභය ඇතුළු කට්ටිය කරපු වැඩක් සලේ හෙළි කරයි ? Previous Story ஜனாதிபதி உரை தொடர்பில்:2 நாள் விவாதம்! Next Story இலங்கை போலீசுக்கு இந்தி பாடம்?