ஆபாச படங்களுக்கு ஒருவர் அடிமையாகிவிட்டார் என்பதை அறிவது எப்படி? 

பிரிட்டிஷ் முன்னாள் ஒலிம்பிக் டைவிங் வீரரான ப்ரெட்டி வுட்வார்டுக்கு, தனது இளம் வயதிலேயே ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கம் தனக்கு பிரச்னைகளை ஏற்படுத்துவதை உணர்ந்தார்.

அவர் கூறுகையில், “நான் படிப்பதற்காக உட்காரும் போதெல்லாம், அந்த இணையதளங்களுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்கு வரும்” என்றார்.

ஆபாசப் படங்களைப் பார்ப்பதை உண்மையில் ஒரு 'போதை'யாகக் கருதலாமா என்பது குறித்து நிபுணர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது

12 வயதிலேயே, அவர் “ஹார்ட்கோர்” (hardcore) எனக் குறிப்பிடப்படும் ஆபாச இணையதளங்களைத் தொடர்ந்து பார்க்கத் தொடங்கினார்.

அவரது விளையாட்டு வாழ்க்கை முன்னேறி, ஒலிம்பிக் போட்டிகளில் தனது நாட்டுக்காகப் பங்கேற்கத் தொடங்கிய போது, அவர் ஒரு நாளைக்கு பல முறை ஆபாச உள்ளடக்கங்களைப் பார்க்கத் தொடங்கினார்.

Let's Talk About Sex! – The Thought Co.

தற்போது 30 வயதாகும் இந்த ஒலிம்பிக் வீரர், தனது சிந்தனை முறையை மாற்றிக்கொண்டதன் மூலம் இறுதியாக இந்தப் பழக்கத்திலிருந்து மீண்டதாக  தெரிவித்தார்.

“ஆபாசப் படங்களைப் பார்ப்பதை நிறுத்த முயற்சிப்பவர் என்ற நிலையில் மட்டும் நீங்கள் இருக்கக் கூடாது. ஆபாசப் படங்களைப் பார்க்காத ஒருவராக நீங்கள் மாற வேண்டும். அதற்கு நிறைய கடின உழைப்பு தேவை,” என்று அவர் கூறினார்.

அப்படியானால், ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது? அதை எப்படிக் கையாள்வது?

“ஆபாசப் படங்களுக்கு அடிமையாதல்” (porn addiction) என்ற சொல் பொதுவானதாகிவிட்டாலும், அது தனிப்பட்ட ஒரு நோயாகவோ அல்லது மனநலக் கோளாறாகவோ அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.

ஃப்ரெட்டி வுட்வார்ட், தனது 12-வது வயதில் ஆபாசப் படங்களைப் பார்க்கத் தொடங்கினார்

ப்ரெட்டி வுட்வார்ட், தனது 12-வது வயதில் ஆபாசப் படங்களைப் பார்க்கத் தொடங்கினார்

“பலருக்கு ஆபாசப் படங்களைப் பார்ப்பதில் பிரச்னைகள் இருப்பதை நாம் அறிவோம்,” என்கிறார் பாலியல் மற்றும் உறவுகள் தொடர்பான உளவியல் சிகிச்சையாளர் சில்வா நெவ்ஸ்.

இந்தப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டு தனது தனியார் கிளீனிக்குக்கு சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் கூறுகிறார்.

ஆனால், இதை உண்மையான “அடிமைத்தனம்” என்று கருத வேண்டுமா என்பதில் நிபுணர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை.

உதாரணமாக, இது போதைப் பொருளுக்கு அடிமையாவதைப் போன்றதா? இதைச் சமாளிக்க சிறந்த வழி என்ன?

ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கேம்பெல் இன்னஸ், பெரும்பாலான மருத்துவர்கள் தற்போது ஒருவருக்கு ‘பிரச்னைக்குரிய ஆபாசப் பயன்பாடு’ (problematic porn use) இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்வதாகக் கூறுகிறார்.

ஆனால், இதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து இன்னும் நிறைய புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

இதனால், தாங்கள் ஆபாசப் படங்களுக்கு அடிமையாகிவிட்டதாகக் கருதுபவர்களுக்கு அறிகுறிகள் அல்லது சிகிச்சைக்கான திட்டவட்டமான பட்டியல் எதுவும் இல்லை.

சில நிபுணர்கள் இதை கட்டாய பாலியல் நடத்தை கோளாறின் (Compulsive Sexual Behaviour Disorder) ஒரு வடிவமாகக் குறிப்பிடுகின்றனர். உலக சுகாதார அமைப்பு (WHO) இந்தக் கோளாறை அங்கீகரித்துள்ளது.

உளவியல் சிகிச்சையாளர் பவுலா ஹால் விளக்குகையில்,”இதில், ஒருவரின் பாலியல் நடத்தை தனது கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக அவர் உணர்கிறார். அது அவருக்கு மிகுந்த பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்த முயன்றாலும், அவரால் அதை கட்டுப்படுத்த முடிவதில்லை.”

பவுலா ஹால், பாலியல் மற்றும் ஆபாசப் படங்களுக்கு அடிமையாதல் தொடர்பான சிகிச்சை வழங்கும் லாரல் மையத்தில் பணியாற்றி வருகிறார்.

ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கத்தைக் குறைக்க முடியுமா?

ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கத்தை நீங்கள் விரும்பும் போது குறைக்கவோ அல்லது மாற்றவோ முடியுமா என்று உங்களையே கேட்டுக்கொள்வதும் முக்கியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் (சித்தரிப்புப் படம்).

ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கத்தை நீங்கள் விரும்பும் போது குறைக்கவோ அல்லது மாற்றவோ முடியுமா என்று உங்களையே கேட்டுக்கொள்வதும் முக்கியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் 

ஆபாசப் படங்களைப் பார்ப்பதற்கு ஒருவர் அடிமையாகிவிட்டாரா என்பதை எப்படி கண்டறிவது?

உளவியல் சிகிச்சையாளர் சில்வா நெவ்ஸ் கூறுகையில், ஒருவர் எத்தனை முறை அல்லது எவ்வளவு நேரம் ஆபாசப் படங்களைப் பார்க்கிறார் என்பதை மட்டும் வைத்து இதைத் தீர்மானிக்க முடியாது.

உண்மையான கேள்வி, “இந்தப் பழக்கம் உங்கள் வாழ்க்கையில் எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது?” என்பதுதான்.

உதாரணமாக, இரவு முழுவதும் ஆபாசப் படங்களைப் பார்த்துவிட்டு, காலையில் வேலைக்குத் தாமதமாகச் செல்வது; அன்புக்குரியவர்களுக்கான கடமைகள் அல்லது பொறுப்புகளைவிட ஆபாசப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது; அல்லது அலுவலகத்திலேயே ஆபாசப் படங்களைப் பார்ப்பது போன்றவை இதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

ஆய்வாளர் கேம்ப்பெல் இன்னஸ் கூறுகையில், நீங்கள் விரும்பும்போது இந்தப் பழக்கத்தைக் குறைக்கவோ மாற்றிக்கொள்ளவோ உங்களால் முடிகிறதா? என்பதையும் உங்களிடமே கேட்டுக்கொள்வது முக்கியம்.

முன்பு கிடைத்த அளவுக்கு இப்போது மகிழ்ச்சியைத் தரவில்லை என்றாலும், நீங்கள் தொடர்ந்து ஆபாசப் படங்களைப் பார்க்கிறீர்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.

கிரெய்க், தன்னை ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கத்திலிருந்து மீண்டு வருபவர் என்று கூறுகிறார். கொரோனா பெருந்தொற்றின்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில், தன்னால் இந்தப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்ததாக அவர் கூறுகிறார். அப்போது அவருக்கு 30 வயது.

“ஊரடங்குக்கு முன்பு இது எனக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருந்ததாக நான் நினைக்கவில்லை. ஆனால், ஊரடங்கின்போது ஏற்பட்ட அதிகரித்த அழுத்தமும் தனிமையும் இந்தப் பிரச்னையை மேலும் தீவிரமாக்கத் தொடங்கின,” என்று அவர் கூறுகிறார்.

“இந்தப் பழக்கத்திலிருந்து எப்படி விடுபடுவது என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.”

இருப்பினும், சமூக, தார்மீக அல்லது மதக் காரணங்களால் பலர் தாங்கள் ஆபாசப் படங்களைப் பார்ப்பது குறித்து குற்ற உணர்வு அல்லது அசௌகரியம் அடையக்கூடும் என்று இன்னஸ் எச்சரிக்கிறார்.

ஆனால், அதனால் மட்டும் அவர்களின் பழக்கம் கட்டுப்பாட்டை மீறிவிட்டது என்று அர்த்தமல்ல.

“ஒருவர் வாரத்துக்கு மூன்று முறை, ஐந்து நிமிடங்கள் ஆபாசப் படங்களைப் பார்த்துவிட்டு, அவமான உணர்வு காரணமாகத் தான் அடிமையாகிவிட்டதாக நினைக்கலாம்,” என்கிறார் நெவ்ஸ்.

“அதே நேரத்தில், ஒருவர் தினமும் ஆபாசப் படங்களைப் பார்த்துவிட்டு, அதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று நினைக்கலாம்.”

தங்களிடம் வருபவர்கள், “நான் அடிமையா, இல்லையா?” என்ற மனநிலையிலிருந்து வெளியே வர வேண்டும் என்று உளவியல் சிகிச்சையாளர் பவுலா கூறுகிறார்.

அதற்குப் பதிலாக, ஆபாசப் படங்களைப் பார்ப்பது அவர்களின் படிப்பு, வேலை, உறவுகள் மற்றும் வாழ்க்கையின் பிற பகுதிகளை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்கிறார்.

தனது வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு மனக்காயங்களைச் சமாளிக்க, சிறுவயது முதலே ஆபாசப் படங்களைப் பார்த்து வருவதாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்

தனது வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு மனக்காயங்களைச் சமாளிக்க, சிறுவயது முதலே ஆபாசப் படங்களைப் பார்த்து வருவதாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார் 

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஓரே ஓடுபா, கடந்த ஆண்டு தனக்கு இருந்த 30 ஆண்டுகால ஆபாசப் படங்களை பழக்கம் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

தனக்கு ஒன்பது வயதாக இருந்தபோது இந்தப் பழக்கம் தொடங்கியதாகவும், அது “உள்ளுக்குள் தனது வாழ்க்கையை அழித்துக் கொண்டிருந்ததாகவும்” அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ‘வீ நீட் டூ வாக்’ என்ற பாட்காஸ்டில் பேசிய அவர், சிறு வயது முதலே தனது வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு அதிர்ச்சிகரமான அனுபவங்களைச் சமாளிப்பதற்காக ஆபாசப் படங்களை நாடியதாகக் கூறினார். பின்னர் அவர் இந்தப் பழக்கத்திலிருந்து மீண்டார்.

இந்த நடத்தை ஏன் தொடங்குகிறது என்பது குறித்து இன்னும் முழுமையாகத் தெளிவாகத் தெரியவில்லை என்றும், இதுகுறித்து மேலும் ஆய்வுகள் தேவை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

“அறிவியல் ஆய்வுகள் வேகமாக முன்னேறி வருகின்றன. ஆனால், இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது,” என்கிறார் இன்னஸ்.

ஒருவரது வாழ்க்கையில் மனதைத் தொந்தரவு செய்யும் ஏதாவது ஒன்றிலிருந்து தப்பிப்பதற்கான வழியாக, சில நேரங்களில் இந்தப் பழக்கம் தொடங்கலாம் என்கிறார் பவுலா ஹால். உதாரணமாக, மன அழுத்தம் நிறைந்த வேலை அல்லது முறிந்த உறவு போன்றவை காரணமாக இருக்கலாம்.

அதற்கு முன்பே இருந்த சில காரணிகளும் இருக்கலாம். அவற்றில் அதிர்ச்சிகரமான அனுபவங்கள், குழந்தைப் பருவ அனுபவங்கள் அல்லது தன்னைப் பற்றிய எதிர்மறையான எண்ணம் ஆகியவை அடங்கும்.

இதுபோன்ற காரணங்களால், ஒருவர் ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவது மேலும் கடினமாகலாம்.

40 வயதான கிரெய்க், ஆபாசப் படங்கள் “வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைச் சமாளிப்பதற்கான ஒரு வழியாக” மாறிவிட்டதாகக் கூறுகிறார்.

“நான் உடைந்துபோனதைப் போலவும், அதிலிருந்து வெளியேற எந்த வழியும் இல்லாததைப் போலவும் உணர்ந்தேன்,” என்று அவர் நினைவுகூர்கிறார். ஆனால், சிகிச்சை மற்றும் மீட்புப் பயணத்துக்குப் பிறகு, அவரது சிந்தனை மாறத் தொடங்கியது.

டிஜிட்டல் சூழலின் தாக்கத்தையும் பவுலா ஹால் சுட்டிக்காட்டுகிறார். இதுபோன்ற அல்காரிதம்கள் மூலம் மக்கள் “வடிவமைக்கப்பட்ட விதத்திலேயே அடிமையாகிவிடும்” நிலை ஏற்படலாம் என்கிறார்.

ஏஐ மூலம் உருவாக்கப்படும் ஆபாச உள்ளடக்கங்களால் நிலைமை மேலும் மோசமடைந்து வருவதாக பவுலா ஹாலும் சில்வா நெவ்ஸும் கூறுகின்றனர்.

நெவ்ஸின் கூற்றுப்படி, இதன் மூலம் மக்கள் “தாங்கள் விரும்புவதையும் தேவையென நினைப்பதையும் துல்லியமாக உருவாக்கிக்கொள்ள” முடிகிறது.

எப்படி மீண்டு வருவது?

ஆபாசப் படங்கள் தொடர்பான சிக்கல்கள் மற்ற மனநலப் பிரச்னைகளுடன் இணைந்து காணப்படுவது இயல்பான ஒன்று என்று நிபுணர்கள் கருதுகின்றனர்

ஆபாசப் படங்கள் தொடர்பான சிக்கல்கள் மற்ற மனநலப் பிரச்னைகளுடன் இணைந்து காணப்படுவது இயல்பான ஒன்று என்று நிபுணர்கள் கருதுகின்றனர்

ஆபாசப் படங்களைப் பார்க்கும் உங்கள் பழக்கம் பிரச்னையாக மாறி வருவதாக நீங்கள் உணர்ந்தால், தகுதியும் அனுபவமும் வாய்ந்த நிபுணரிடம் உதவி பெறுவது பரிந்துரைக்கப்படுகிறது.

பதிவுசெய்யப்பட்ட உளவியல் நிபுணரிடம் பேசுவது குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் இன்னஸ்.

ஏனெனில், அவர் உங்கள் மனநலத்தை ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்ய முடியும்.

ஆபாசப் படங்கள் தொடர்பான பிரச்னைகளுடன் பிற மனநலப் பிரச்னைகளும் சேர்ந்திருப்பது பொதுவானது என அவர் கூறுகிறார்.

கிரெய்க்குக்கும் இதேபோன்ற அனுபவம் ஏற்பட்டது. ஆனால், ஆபாசப் படங்களைப் பார்க்கும் தனது பழக்கம் ஆரோக்கியமற்றதாக இருக்கலாம் என்பதை அவர் உணரவில்லை.

மனநலத்துக்காக சிகிச்சை பெறத் தொடங்கியபோதுதான் இது தெரியவந்தது.

“எனது மனநலப் பிரச்னைகளுக்கு ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கமும் ஒரு காரணமாக இருந்ததை நான் உணர்ந்தேன்,” என்று அவர் கூறுகிறார்.

அவரது சிகிச்சையாளர், பாலியல் அடிமைத்தனத்திலிருந்து மீள்வதற்கான 12 படிநிலைத் திட்டத்தில் இணையுமாறு அவருக்கு அறிவுறுத்தினார்.

இந்த மீட்பு முறையானது ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (Alcoholics Anonymous) அமைப்பு உருவாக்கிய முறையை அடிப்படையாகக் கொண்டது.

இது தனக்கு மிகவும் உதவியாக இருந்ததாக கிரெய்க் கூறுகிறார்.

“ஆபாசப் படப் பழக்கத்திலிருந்து மீள்வது எளிதானதாகவோ நேரடியானதாகவோ இருக்கவில்லை. இப்போது நான் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன். ஆனால், மீட்பு என்பது ஒவ்வொரு நாளாகக் கடந்து செல்ல வேண்டிய ஒரு செயல்முறை என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.”

அத்தகைய பழக்கத்திலிருந்து விடுபட, அதற்கான காரணங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் (சித்தரிப்புப் படம்).

அத்தகைய பழக்கத்திலிருந்து விடுபட, அதற்கான காரணங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் 

உங்களுக்கு ஏற்ற உதவியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அது குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ளுமாறு இன்னஸ் பரிந்துரைக்கிறார்.

அனைவருக்கும் ஒரே மாதிரியான பொதுவான ஆலோசனைகளை வழங்கும் இணையவழி ஆதாரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

“சில நிபுணர்கள் ஆபாசப் படங்களைப் பார்ப்பதை முற்றிலுமாக நிறுத்துவதற்கு மக்களுக்கு உதவுகின்றனர். மற்றவர்கள், ஆபாசப் படங்களைப் பார்ப்பது அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்படியும், இயல்பான வாழ்க்கையுடன் இணக்கமாக இருக்கும்படியும் அதைத் தங்கள் வாழ்க்கையில் நிர்வகித்துக்கொள்ள உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்,” என்கிறார் நெவ்ஸ்.

இந்தப் பழக்கம் ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்வது சிகிச்சையின் முக்கியமான பகுதியாகும் என்கிறார் பவுலா ஹால்.

ஆபாசப் படங்களைத் தடுக்கும் மென்பொருளைத் தங்கள் செல்போன்கள் அல்லது கணினிகளில் நிறுவுவது போன்ற நடவடிக்கைகளையும் ஒருவர் மேற்கொள்ளலாம் என அவர் கூறுகிறார்.

மன அழுத்தத்தில் இருக்கும்போது அல்லது தனியாக இருக்கும்போது ஆபாசப் படங்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக ஏற்படுகிறதா என்பது போன்று, எந்தச் சூழ்நிலைகளில் இந்தப் பழக்கத்துக்கான தூண்டுதல் அதிகமாகிறது என்பதை அடையாளம் காணவும் அவர் பரிந்துரைக்கிறார்.

அதன் பிறகு, அத்தகைய சூழ்நிலை ஏற்படும் போது ஆபாசப் படங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக என்ன செய்யலாம் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளலாம்.

Previous Story

https://youtu.be/W_gR6wyph8M