‘அஸ்வெசும’ மேன் முறையீடுகள்: அரசாங்க அறிவிப்பு

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,  அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதல் பயனாளர் பெயர் பட்டியலுக்கு எதிராக நிறைவடைந்த 20 நாட்களுக்குள் மாத்திரம் 968,000 மேன்முறையீடுகளும்,17,500 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள்

அஸ்வெசும நிவாரணத் திட்டம்! மேன்முறையீடு செய்துள்ளவர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு | Aswesuma Samurdhi Welfare

சமுர்த்தி நலன்புரி திட்டத்துக்கு பதிலாக அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்கு 33 இலட்ச பேர் விண்ணப்பித்த நிலையில் 22 இலட்சம் பேருக்கு குறுகிய மற்றும் நீண்டகால அடிப்படையில் நிவாரண கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்தது.

இதனடிப்படையில் ஆரம்பக்கட்ட 4 இலட்சம் குடும்ப பயனாளர்களுக்கு ஐந்து மாதகாலத்துக்கும், சமூக கட்டமைப்பில் அவதானம் நிலையில் உள்ள நான்கு இலட்ச குடும்பங்களுக்கு 08 மாத காலத்துக்கும், வறுமை நிலையில் உள்ள 08 இலட்ச குடும்பங்களுக்கும், அதி தீவிர வறுமை நிலையில் உள்ள 04 இலட்ச குடும்பங்களுக்கு 03 வருட காலத்துக்கும் நிவாரண கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கபபட்டது.

Send Aswesuma Objections and appeals to Welfare Benefits Board Before July 10 - Lankaxpress

அரசாங்க அரசாங்கத்தின் நலன்புரித் திட்டத்தின் கொள்கைக்கு அமைய இதுவரை காலமும் 16,55000 சமுர்த்தி பயனாளர்களுக்கு மாத மற்றும் வருட அடிப்படையில் நிவாரண நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. தற்போது அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் அந்த எண்ணிக்கை 12 இலட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதல்கட்ட பயனாளர்களின் பெயர் பட்டியல் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி வெளியிடப்பட்டு மேன்முறையீடு மற்றும் முறைப்பாடளிப்பதற்கு 10 நாட்கள் காலவகாசம் வழங்கப்பட்டது.

புதிய பெயர் பட்டியலில் உள்வாங்கப்படாதவர்கள் பிரதேச செயலகங்கள் முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டதால் மேன்முறையீடு செய்வதற்கான காலவகாசம் நேற்று முன்தினம் (10)ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. இதற்கமைய வழங்கப்பட்ட காலவகாசத்துக்குள் மாத்திரம் 968,000 மேன்முறையீடுகளும்,17,500 முறைப்பாடுகளும் கிடைக்பெற்றுள்ளன எனவும் அவர் கூறினார்.

அத்துடன், இந்த மேன்முறையீடு, முறைப்பாடுகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக மீளாய்வு செய்யப்படும் எனவும் தகுதிவாய்ந்த தரப்பினர்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Previous Story

தீர்க்கமான நேட்டோ கூட்டம்!

Next Story

ஜாமியுல் அஸ்ஹரில் ஒரு வரலாற்றுப் பதிவு