அரபாத் 50 வருட நிகழ்வுகள் முன்கூட்டியே ஆரம்பம்!

கண்டி-உடதலவின்ன அரபாத் இயக்கம் மற்றும் அதன் விளையாட்டுக் கழகம் என்பவற்றின்  ஐம்பது வருட பூர்த்தி 2023ல் இருந்தாலும், முன்கூட்டியே அதாவது 2022லே அது தனது 50 வருடகால நிகழ்வுகளை ஆரம்பிக்க இருக்கின்றது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை இது தொடர்பாக நடந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானப்படி 2022ல் APL கிரிக்கட்ட போட்டிகளை மூன்று பிரிவுகளில் நடாத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தவிர சிறுவர்களுக்கான KIDS  நிகழ்ச்சிகளும் 2022 ல் நடக்க இருக்கின்றன. ஏனைய நிகழ்வுகள் 2023ல் நடத்தப்படும். அதில் அமைப்பு கொள்வனவு செய்துள்ள காணியில் அரபாத் இயக்கம் ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுவது முக்கிய நிகழ்வாக அமைய இருக்கின்றது.

அந்த ஐந்து அடக்கு மண்டபத்தில்

  1. கடைத் தொகுதி
  2. வரவேற்ப்பு மண்டபம்
  3. விளையாட்டு மண்டபம்
  4. வாசிகசாலை
  5. கேட்போர் கூடம் என்பனவும் அமைய இருக்கின்றன.

அத்துடன் 50 வருட பூர்த்தியை முன்னிட்டு கோலாகலமான விழாவும், மேலதிக நிகழ்வுகளும் 2023ல்  இடம் பெற இருக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக் கிழமை அரபத் இயக்கத்தின் தலைவர் எம்.என்.எம் யசார் தலைமையில் நடந்து கூட்டத்தில் இத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. கூட்டத்தை ஆசிக் மொஹம்மட் நெறிப்படுத்தியதோடு உடதலவின்ன பள்ளி பரிபாலன சபைத் தலைவரும் முன்னாள் அதிபருமான எம்.ஜீ. நிலாப்தீன் அவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கி இருந்தார்.

Previous Story

கொரோனாவுக்கு முடிவு : போப்  பிரார்த்தனை

Next Story

பஞ்சத்தை உறுதி செய்யும் அமைச்சர் பந்துல