-யூசுப் என் யூனுஸ்-
கடந்த ஞாயிற்றுக் கிழமை (05.12.2021) உடதலவின்னை ஹரிக்கன்ஸ் விளையாட்டுக் கழகம் அணிக்கு எட்டுப் பேரைக் கொண்ட கிரிக்கட் போட்டியொன்றை கட்டுகாஸ்தோட்டை ராகுல கல்லூரி கிரிக்கட் மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
இந்தப் போட்டியில் 24 அணிகள் கலந்து கொண்டன. இறுதிச் சுற்றுக்கு அரபாத் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த இரு அணிகளே தெரிவாகின. இறுதி சுற்றில் அரபாத் நெக்ஸஸ் அணியும் அரபாத் ஸ்கோர்பியன் அணியும் மோதிக் கொண்டன. அரபாத் நெக்ஸஸ் அணிக்கு பசாலும் அரபாத் ஸ்கோர்பியன் அணிக்கு அஸ்மரும் தலைமை தாங்கினர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய அரபாத் ஸ்கோபியன் அணி இலக்கை பதிலுக்கு ஆடிய அரபாத் நெக்ஸஸ் அணி பெற்றுக் கொண்டது. இறுதி ஆட்டத்தில் சிறப்பாட்டக்காரராக வசீஹூல் லாபீர் தெரிவானார். ஆட்டத் தொடரில் சிறப்பாட்டக்காரராக அஸ்மர் அக்பரும் சிறந்த பந்து வீச்சாளராக ஆசிப் அக்பரும் தெரிவானார்கள்.
அரபாத் நெக்ஸஸ் அணி
பசால் (தலைவர்)
ஆசிப்
அரூஸ்
ரிப்கி
இசாம்
செய்ப்
சிராப்
ரைஸ்
அரபாத் ஸ்கோர்பியன் அணி
அஸ்மர் (தலைவர்)
வசீஹூல்
அல்பயாட்
சாக்கீர்
அப்தாஸ்
இப்தி
இஹ்வான்
நுஸ்கி
இர்ஷாட்
1973ல் துவக்கப்பட்ட உடதலவின்னை அரபாத் இயக்கம்-விளையாட்டுக் கழகம் என்பன தனது ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடுகளைச் செய்ய இருக்கின்ற நேரத்தில் இந்த வெற்றி உலகம் பூராவிலும் பரந்து வாழ்கின்ற அரபாத் ஆதரவாலர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகங்களும் இல்லை.