அரசு பிளக்கிறதாம்-விமல்!

 நஜீப்

நன்றி:11.01.2025 ஞாயிறு தினக்குரல்

இது விமல் வீரவன்ச தரும் வாக்குமூலம்: பிறந்த இடம் களுத்துறை-அகலவத்தை. வயது 55. கல்வி உயர்தரம் வரை. கல்லூரி அணிக்காக கிரிக்கட்டும் விளையாடி இருக்கின்றேன்.

படிக்கும் போதே ஜேவிபி. அரசியலில் இறங்கி விட்டேன். எனது தந்தை ஒரு சு.கட்சி ஆதரவாலர்.  விமலசிரி கம்லத் என்ற பெயரில் ஊடகப்பணி.

அண்ணனின் பிலியந்தல சிறிய டைலர் சொப்பில் சில காலம் உதவியாளன். என்னிடம் குடிப்பழக்கம் இருந்தது. ஆனால் இன்று இல்லை. எனது பின்னடைவு தற்காலிகமானது.

ஒரு முறை கஞ்சாவுடன் பிடிபட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை விடுவித்து ஜனாதிபதி மஹிந்த ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தையுமே பாதுகாத்தார் என்றும் விமல் மகிந்தவை பாராட்டுகின்றார்.!

இந்த சிங்கள தமிழ் புத்தாண்டில் அரசும் என்பிபியும் பிளக்கும். இது நிச்சயம் நடக்குமாம். அத்துடன் அனுரவுக்குப் பின்னர் ஜேவிபி. அழியுமாம்.

Previous Story

சிரியா மீது முழு தாக்குதல்..

Next Story

கடவுள் இருக்கிறானா? දේව පැවැත්ම සත්‍යය ද ? දහස් ගණනක් ඉස්ලාමය වැළඳ ගැනීමට හේතු වූ වීඩියෝ පටය සිංහලෙන්