அரசு பலமாகவே இருக்கின்றது.!

-நஜீப்-

பதவியில் இருக்கின்ற அரசு இன்றும் பலமாக இருக்கின்றது என்பதற்கு ஒரு நல்ல சாட்சி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்கவுக்கு எதிரான பிரேரணை. மக்கள் மீது அரசாங்கம் கொடுக்கும் நெருக்கடிகளுக்கு எதிரான குடிமக்கள் சார்பில் களத்தில் நின்று செயல்பட்டவர்தான் ஜனக்க. ஆனால் கடந்த தேர்தல் காலங்களில் இவர் கோட்டா விசுவாசியக இருந்தே இந்தப் பதவிக்கு வந்தார்.

அதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஸ காலத்திலும் நல்லாட்சிக் காலத்திலும் இவர் அதிகாரத்தில் இருந்தவர்களுடன் இருந்தவர்.  அவரை துரத்த வேண்டும் என 123 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன.

தங்க மோசடியில் சிக்கிய புத்தள அலி சப்ரி இவருக்கு ஆதரவாக வாக்களித்து தன்மீதான கவனத்தை திசைதிருப்ப முற்ச்சியை செய்திருந்தார். பொருளையும் இழந்து தண்டணைப் பணமும் கட்டிய மனிதன் இப்போது சமான் தன்னுடையதில்லை என்றும் நீதி கேட்டு சட்ட நடவடிக்கை என்றும் கதைக்குது . தனக்கு உதவாத காரணத்தால் அரசுக்கு எதிர்த்து வாக்களித்ததாக வேறு கதை. அலி சொன்னபடி நீதி முன் செல்லும் கதை உண்மையா பார்ப்போம்.

நன்றி:28.05.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சாத்தான் கோவில்: பைபிளை கிழிக்கும் இவர்கள் யார்?

Next Story

விமலின் மறைக்கப்பட்ட கதை!