அமைச்சுக்களும் நியமனங்களும்!

-நஜீப்-

நன்றி: 24.11.2024 ஞாயிறு தினக்குரல்

கடந்த பல தசாப்தங்களாக இந்த நாட்டில் யார் அதிகாரத்துக்கு வருகின்றார்களோ அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கையாட்களுக்கும்தான் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவது சம்பிரதாயமாக அமைந்திருந்தன.

அதனால் நாட்டுக்கு நடந்த கொடூரங்களை நாம் இங்கு பட்டியலிட விரும்பவில்லை. சுருக்கமாக உலகில் வங்குரோத்து தேசம் என்று ஒரு நாமத்தை அந்த ஆட்சியாளர்கள் நமக்குப் பெற்றுக் கொடுத்தார்கள்.

தற்போது நியமனம் செய்யப் பட்டிருக்கின்ற அமைச்சரவை தொடர்பான ஆரோக்கியமான ஒரு பார்வை நாட்டில் இருக்கின்றது. தனது கட்சியில் சில முக்கியஸ்தர்களுக்குக் கூட அனுர அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை.

இதுகால வரையும் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தினருக்கு ஒரு அமைச்சுக்கூட கிடைக்காமல் போனது ஒரு அதிர்ச்சியான செய்தியாகத்தான் பார்க்கப்படுகின்றது. இந்த அமைச்சு நியமனம் ஒரு கலந்துறையாடலில்தன் தெரிவாகியது.

தேர்தல் முடிந்தவுடன் இது தொடர்பாக பல சந்திப்புக்களும் நடந்தன. ஜனாதிபதி அனுர, ஜேவிபி. செயலாளர் டில்வின். எப்பிபி. செயலாளர் டாக்டர் நளிந்த விஜேசிங்ஹ போன்றவுகள்தான் இறுதி முடிவை எடுத்தார்கள்.

 

Previous Story

1977க்கு முன்னய நிலை நாட்டில்!

Next Story

அதிர்ச்சி: மருத்துவர் ஷாபிக்கு எதிராக போலி முறைப்பாடுகளை தயாரித்த பொலிஸார்! ​