அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள 4 நாடுகள்:  பரபரப்பு தகவல்

சீனா, ரஷ்யா, வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு தீவிர அச்சுறுத்தலாக உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அச்சுறுத்தல் ஆய்வு அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கிழக்கு ஆசியாவில் முக்கிய சக்தி வாய்ந்த ஒன்றாகவும், உலக அரங்கில் பெரிய ஆற்றல் வாய்ந்த நாடாகவும் திகழ சீனா பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய பல நூறு ஏவுகணைகளையும் சீனா தயாரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புலனாய்வு அறிக்கையில் வெளியான தகவல்

மேலும், சீனா- ரஷ்யா இடையேயான உறவு அமெரிக்காவுக்கு எதிரான ஆற்றல் வாய்ந்த அச்சுறுத்தலாக அமையும் எனவும், ஈரான் ஹேக்கர்கள் துணையுடன் வலைதள தாக்குதல்களில் ஈடுபடும் சாத்தியம் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அணு ஆயுத வளர்ச்சி நடவடிக்கைகளில் அந்நாடு தற்போது ஈடுபடவில்லை என்றபோதிலும், தனது அணு ஆயுத திட்டங்களை விரிவுப்படுத்த உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

வடகொரிய ராணுவமும் தனது அணு ஆயுத திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி வருவது, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு தீவிர அச்சுறுத்தலாக உள்ளதாக அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Previous Story

மலேசிய: முன்னாள் பிரதமர்  யாசின் ஊழல் வழக்கில் கைது 

Next Story

ஏப்ரலில் 25தேர்தல் நடந்தாலும், உறுப்பினர் பதவிக் காலம் 2024 தான் ஆரம்பமாகும்