அபிதாபி டிரோன் தாக்குதல் எதிரொலி.!. 7 வருட உச்சத்தினை தொட்ட கச்சா !!

கச்சா எண்ணெய் விலையானது 7 வருட உச்ச விலையினை எட்டியுள்ளது. இது மீண்டும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க வழிவகுக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இது அபுதாபியில் உள்ள ஒரு எண்ணெய் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்குக்கு அருகிலுள்ள, முசாஃபா பகுதியில் மூன்று எரிபொருள் டேங்கர் லாரிகள் வெடித்துச் சிதறியது. இதனையடுத்து அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் கட்டுமான தளத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது ட்ரோன் தாக்குதல், தங்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று ஏமனின் ஹவுதி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த விபத்து ஆளில்லா விமானங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

சப்ளை சங்கிலியில் பாதிப்பா?

இதற்கிடையில் இந்த தாக்கத்தினால் கச்சா எண்ணெய் சப்ளையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் தான் கச்சா எண்ணெய் விலையில் உச்சத்தினை எட்டியுள்ளது. இது இந்தியா போன்ற அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவினை பாதிக்கலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. அபுதாபியில் நிலவி வரும் இந்த பதற்றமான நிலையானது இன்னும் தொடர்ந்து வரும் நிலையில், இது இன்னும் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

தற்போது WTI கச்சா எண்ணெய் விலையானது 1.76% அதிகரித்து, 84.78 டாலர்களாக காணப்படுகின்றது. கடந்த அமர்வில் 83.3 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 83.69 டாலர்களாகவும் தொடங்கியுள்ளது. இன்று தற்போது வரையில் அதிகபட்சமாக 84.92 டாலர்கள் வரையில் சென்று, தற்போது 84.80 டாலராக வர்த்தகமாகி வருகின்றது.

பிரெண்ட் கச்சா எண்னெய் விலை

இதே பிரெண்ட் கச்சா எண்னெய் விலையானது 1.47% அதிகரித்து, 87.75 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வில் 86.48 டாலராக இருந்தது. இன்று காலை தொடக்கத்தில் 86.50  டாலராக தொடங்கியது. இன்றைய உச்ச விலை இதுவரையில் 87.87 டாலரினை தொட்ட நிலையில், தற்போது 87.69 டாலராக வர்த்தகமாகி வருகின்றது.

இந்திய சந்தையில் கச்சா எண்னெய் விலை

இந்திய சந்தையில் கச்சா எண்னெய் விலையானது பேரலுக்கு 89 ரூபாய் அதிகரித்து, 6350 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் 6261 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 6298 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது தொடர்ச்சியாக கடந்த சில வாரங்களாகவே ஏற்றத்திலேயே இருந்து வருகின்றது.

ஏன் இந்த தாக்குதல்

அபுதாபி விமான நிலையம், அபுதாபியின் முஷாபா நகரில் உள்ள அண்டொக் எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், இதில், எண்ணெய் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டேங்குகள் வெடித்து சிதறியது. அபுதாபியில் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில் இந்த பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பதற்றமான நிலை

இதனால், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி கூட்டுப்படைகளுக்கும் இடையே மோதல் போக்கு இன்னும் அதிகரிக்கலாம் என்ற பதற்றமான நிலையே இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பெட்ரோல், டீசல் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

Previous Story

ஆப்கன்:  அடி மேல் அடி இடி மேல் இடி நிலநடுக்கம்.. 36 பேர் பலி

Next Story

சகோதரியை திருமணம் செய்த மன்னர்கள்