-அம்ரா-
மத நிந்தனை செய்த குற்றச்சாட்டில் சவுதி அரேபியாவில் அனோஜன் என்ற தமிழ் சகோதரர் மரண தண்டணைக்கு ஆளாகி இருப்பதாகச் சொல்லப்படுகின்ற விவகாரம் நமக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த விடயத்தில் தண்டணைக்கு இலக்காகி இருக்கின்ற அனோஜனை விடுதலை செய்வதற்காக நாட்டில் வாழ்கிக்னற முஸ்லிம் சமூகத்தின் சார்பில் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தான் முன்னெடுத்து வருவதாக சில மணி நேரங்களுக்கு முன்னர் உரையாற்றுகின்ற போதே பிரதி அமைச்சர் இந்தக் கருத்தை அங்கு தெரிவித்தார்.
இலங்கை வக்குப் சபையின் ஏற்பாட்டில் அக்குரண பூஜாபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள பள்ளி நிருவாகிகளைத் தெளிவுபடுத்துகின்ற கூட்டத்தை துவக்கி வைக்கிற நிகழ்விலே பிரதி அமைச்சர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.
இந்த வைபவம் அக்குரண அஸ்னா பள்ளிவாயலில் (20.09.2026) இன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



