அனைத்து குற்றங்களுக்கும் அருந்திகவே முன்னோடி:உடுவே தம்மாலோக்க தேரர்

ராகமை மருத்துவப் பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது புதல்வரை விட அருந்திக பெர்னாண்டோ ஆயிரக்கணக்கான குற்றங்களை செய்பவர் என உடுவே தம்மாலோக்க (Uduwe Dammaloka Thero) தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் நடக்கும் குற்றங்கள், தவறுகள், அநீதிகள்,மோசமான சம்பவங்கள் போன்று இலங்கையில் எந்த மாவட்டத்திலும் நடப்பதில்லை. அருந்திக பெர்னாண்டோவே அனைத்து மோசமான குற்றவியல் சம்பவங்களுக்கும் முன்னோடி என்பதை மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன்.

புத்தளம் மாவட்டத்தில் வசித்து வரும் பௌத்த பிக்கு ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் கடந்த வாரம் நடந்தது. எனினும் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யப்படுவதை அருந்திக பெர்னாண்டோ தலையிட்டு தடுத்தார் எனவும் உடுவே தம்மாலோக்க தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

காப்பாற்றுமாறு மகிந்தவிடம்

அழுது புலம்பிய அருந்திக

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) வழங்கிய உத்தரவுக்கு அமையவே அருந்திக பெர்னாண்டோ (Arundika Fernando) ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ராகமை மருத்துவப் பீட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அருந்திக பெர்னாண்டோ நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், ராகமை  மருத்துவப் பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை மாத்திரம் அடிப்படையாக கொண்டு, அருந்திக பெர்னாண்டோவை பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவிடவில்லை எனவும் எத்தனோல் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட வர்த்தகரை வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அழைத்து வந்து, பிணையில் விடுதலையாக வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தமையும் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த உத்தரவு கிடைத்ததும் அருந்திக பெர்னாண்டோ, பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.அவர் பிரதமரின் எதிரில் அழுது புலம்பி, தன்னை காப்பாற்றுமாறு கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.எனினும் இந்த பிரச்சினையில் தலையிட முடியாது எனக் கூறி பிரதமர் மறுத்துள்ளார். இதனால், அருந்திக பெர்னாண்டோ இறுதியில் தனது ராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக பேசப்படுகிறது.

Previous Story

லதா மங்கேஷ்கர் உடல் நிலை மோசம்!

Next Story

தமிழர்களின் தேவைக்காக 3 கோடி பெறுமதியுடைய காணியைக் கொடுத்த இஸ்லாமிய ர்கள்!