அதிர்ச்சி: மருத்துவர் ஷாபிக்கு எதிராக போலி முறைப்பாடுகளை தயாரித்த பொலிஸார்! ​

குருநாகல் மருத்துவமனையின் மகப்றே்று மருத்துவ நிபுணர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக போலி முறைப்பாடுகளை பொலிஸார் முன்னின்று உருவாக்கியுள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது சிங்களத் தாய்மாரை மலடாக்கும் வகையில் சூட்சுமமான முறையில் கருத்தடை சிகிச்சை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2019ம் ஆண்டு மருத்துவர் ஷாபி சிஹாப்தீன் கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து சுமார் ஒன்றரை வருட காலம் தடுப்புக் காவலில் இருந்த அவர், அதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

ஒரே நாளில் போலியான முறைப்பாடுகள்

இந்நிலையில் அவருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் போதுமான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்து கடந்த ஆறாம் திகதி குருநாகல் நீதிமன்றம், மருத்துவர் ஷாபி சிஹாப்தீனை விடுதலை செய்திருந்தது.

மருத்துவர் ஷாபிக்கு எதிராக போலி முறைப்பாடுகளை தயாரித்த பொலிஸார்! ​வெளிவரும் அதிர்ச்சித் தகவல் | Police Has Created False Complaints Against Shaffi

இந்நிலையில் தனது வழக்கின் விசாரணை விடயங்களில் பொலிஸாரின் பக்கச்சார்பான செயற்பாடுகள் குறித்து மருத்துவர் ஷாபி சிஹாப்தீன் பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அப்போதைய குருநாகல் மாவட்ட பிரதிப் பொலி்ஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், அன்றைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் தற்போதைய மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் அதிபருமான மஹிந்த திசாநாயக்க ஆகியோர்  முன்னைய திகதிகளை இட்டு ஒரே நாளில் போலியான முறைப்பாடுகளை தயாரித்து, அதனை அடிப்படையாகக் கொண்டே மருத்துவர் ஷாபி சிஹாப்தீனை கைது செய்துள்ள விவகாரம் தெரிய வந்துள்ளது

இதன் பேரில் குறித்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளிடமும் மிக விரைவில் வாக்குமூலம் பெறப்பட்டு, அவர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Previous Story

அமைச்சுக்களும் நியமனங்களும்!

Next Story

ரணில் மீது ரவி கருணாநாயக்க பாரிய குற்றச்சாட் டு !