-நஜீப்–
நன்றி 17.11.2024 ஞாயிறு தினக்குரல்
இந்த நாட்டில் அணு குமார திசாநாயக்க ஜனாதிபதியானதில் அனைவருக்கும் மனதில் மிகுந்ததோர் மகிழ்ச்சி இருக்கும். ஆனால் அதில் நமக்கு ஒரு சின்ன வலி இதில் தெரிகின்றது.
காரணம் கடந்த காலங்களில் இந்த அணுர நாடாளுமன்றத்தில் பார்த்த பணியை அதே பாணியில் முன்னெடுக்கப் போவது யாராக இருக்க முடியும்?
அந்த இடைவெளி அப்படியே இருக்குமா அல்லது அந்த அணியில் அவர் பணியை முன்னெடுக்கப் போவது யார்?
நடாளுமன்றத்தில் இருக்கின்ற ஒரு நூறு உறுப்பினர்ளைவிடவும் அணுர பலம் வாய்ந்த ஒருமனிதன் என்று நாம் ஒரு முறை அவரது செயல்பாடு தொடர்ப்பில் ஒரு குறிப்பை பதிந்திருந்தோம்.
நாட்டில் இருக்கின்ற கவர்ச்சிகரமானது மட்டுமல்ல தகவல்களை பிசகாசம் மக்கள் மத்தியில் முன்வைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.
நாட்டில் இந்தளவுக்கு என்பிபி. செல்வாக்குப் பெறுவதற்கு அவர் நாடாளுமன்றத்தில் முன்னெடுத்துச் சென்ற வாதங்களும் விவாதமும் முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும்.