‘எச்சரிக்கையாக இருக்கும் முஸ்லிம் சமூகம்’
அணுரவின் போலிக் கையொப்பம் போட்ட கும்பல்!
எவரும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வாக முஸ்லிம்கள் மத்தியில் அணுரவுக்கு ஆதரவு பெருகி வருவதால் சஜித் தரப்பு அதிர்ச்சியடைந்திருகின்றது. இதனால் முடிந்தவரை அணுரவுக்கு முஸ்லிம்கள் மத்தியில் வெறுப்பை உண்டுபண்ணும் கதைளை மேடைகளில் கூறுமாறு கட்டளைகள் பிறப்பிக்கபட்டிருக்கின்றதுன.
அதனைத்தான் முஸ்லிம் தனித்துவத் தலைவர்கள் இந்த நாட்களில் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். மு.கா.செயலாளர் நிசாம் காரியப்பர் அணுர தரப்பினரை கோதாபே ராஜபக்ஸாக்களைவிடவும் மிக மோசமான இனவாதிகள் என்று கூறி இப்போது ராஜபக்ஸாக்களைப் புனிதப்படுத்தி வருகின்றார். இதனை முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்ளுமா?
எப்படி எல்லாம் பேச வேண்டும் ஆபாண்டங்களைச் சொல்ல வேண்டும் என்ற விளக்கங்கள்-அறிவுரைகள் கொடுக்கப்பட்ட இவர்களது துண்டுப் பிரசுரங்கள் சிக்கிக் கொண்டதும் தெரிந்ததே. அணுரகுமாரவின் பேரில் போலிக் கையொப்பம் போட்டு ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. இதனை இப்போது சிஐடியினர் தேடிக் கொண்டிக்கின்றனர்.
இப்படிக் கதைகளைக் கூறிய பலர் இப்போது சட்டத்துக்கு முன் பதில் சொல்ல வேண்டியும் வந்திருக்கின்றது.
கொரோனா மற்றும் ஈஸ்டர் தாக்குதல்களின் போது முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பட்ட, பேசிய, ஜிஹாத் புத்தம் எழுதியவர்களும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையாளர்களை பொலிசார் கைது செய்து அடைத்து வைத்திருந்தபோது அங்கு போய் அவர்களை பலத்காரமாக மீட்டு வந்தவர்கள் மற்றும் முஸ்லிம் விரோத வன்முறைகளுக்கு மகரகமையில் கூட்டம் போட்டவர்கள் என்போரின் பட்டியலை முஸ்லிம் சமூகம் நன்றாக நினைவில் வைத்திருக்கின்றது.
தனித்துவ அரசியல் தலைவர்களான ஹக்கீம் ரிஷhட் போன்றவர்கள் அவர்களுடன் தன்னல அரசியலுக்காக இன்று குடித்தனம் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். துரோகிகளை சமூகத்தின் பேரில் அரசியல் செய்யும் வியாபாரிகள் மறந்தாலும் இந்த நாட்டு முஸ்லிம்கள் அவர்களை மறக்கத் தயாராக இல்லை.
கடந்த காலங்களில் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் பேச்சுக்களை சமூகம் அளவீடு செய்து விளிப்பாக இருந்து தீர்மனங்களை எடுப்பதால் இந்தத் தேர்தலில் தமக்கு பின்னடைவு வந்து விடும் என்ற அச்சத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் பெரும் அச்சத்தில் இருப்பது தெளிவாகத் தெரிகின்றது.
அத்துடன் அணுர அதிகாரத்துக்கு வந்தால் பௌத்தத்துக்கு ஆபத்து என்று பேசுகின்றவாகள் மறுபுறத்தில் முஸ்லிம்களுக்கு ஆபத்து என்றும் பேசுவது எந்தளவுக்கு நயவஞ்சகத்தனமான செயல் என்பதை சமூகம் சிந்திக்க வேண்டும்.