அகுரண  PMJD ஒரு தரப்பினர் NPP க்கு ஆதரவு

இன்று அகுரண பிரதேச சபையில் அதிகாரத்தில் இருப்பது PMJD தலைமையிலான அணி. அதன் தவிசாளர் இஸ்திகார் இமாமுத்தீன். 2024 ஜனாதிபதித் தேர்தலில் அவர் ரணில் விக்கிரமசிங்ஹவை ஆதரிக்கின்றார்.

அதே நேரம் அந்த அணியில் மற்றுமொரு பிரிவு அனுர குமாரவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி இருக்கின்றது. பிஎம்ஜேடி அமைப்பின் தலைவர் சட்டத்தரணி, கலாநிதி. என்.எல்.இஸட். மசூதீனும் மற்றும் இன்னும் பலருமே இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தற்போது அகுரண என்பிபி. அணியுடன் இணைந்து அனுர வெற்றிக்காகக் களத்தில் இருக்கின்றார்கள்.  அகுரண NPP: ரியாஸ் என்பவர் தலைமையில் இயங்குகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் PMJD அமைப்பிலுள்ளவர்கள் சுதந்திரமாகச் செயலாற்ற அனுமதி வழக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது

 

 

 

Previous Story

அனுர ஞாயிறு (22.09.2024) மாலை 9 வது ஜனாதிபதியாக பதவி ஏற்கின்றார்-

Next Story

ஜனாதிபதித் தேர்தல் 2024 வெற்றி வாய்ப்பு