ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்?

ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?

இரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற விமானம் மலையில் மோதி விபத்தில் சிக்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. யார் இந்த இப்ராஹிம் ரைசி.. இவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.  மே 20 2024 திங்கட்கிழமை ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கிழக்கு அஜர்பைஜானில் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.

வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட மூத்த அதிகாரிகள் சிலர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது. “திடீரென கட் ஆன சிக்னல்..” ஈரான் அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டருக்கு என்ன நடந்தது..

Who is Iranian President Ebrahim Raisi whose helicopter crashed in Azerbaijan

“திடீரென கட் ஆன சிக்னல்.. ”

பரபர தகவல் விபத்து: மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சுமார் 40 மீட்பு மீட்புப் படையினர் சம்பவம் நடந்த இடத்தில் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டருக்கு என்ன ஆனது என்பது குறித்த உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த இப்ராஹிம் ரைசி யார்.. இவர் எப்படி அதிபரானார் என்பது குறித்து நாம் பார்க்கலாம். கடந்த 1960 டிசம்பர் 14ஆம் தேதி அங்குள்ள மஷாத்தின் நோகன் மாவட்டத்தில் ஒரு மதகுரு குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த இப்ராஹிம் ரைசி. பள்ளிப் படிப்பை முடித்த இவர், தொடர்ந்து சட்டப் படிப்பை முடித்தார்.

ஈரானின் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவராக ரைசி வளம் வந்தார். தொடர்ந்து நீதிபதியாக பணியாற்றிய அவர் கடந்த 2019இல் ஈரான் நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவ்

எதிர்ப்புகள்:

இதற்குச் சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பின. ஏனென்றால் ஈரான்- ஈராக் போருக்குப் பின் 1988ல் அரசியல் கைதிகள் பலர் தூக்கிலிடப்பட்டதில் ரைசிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரை தலைமை நீதிபதியாக நியமித்ததைப் பல சர்வதேச அமைப்புகள் எதிர்த்தன.

சுமார் 5,000 கைதிகளின் மரண தண்டனைக்குக் காரணமாக நான்கு நீதிபதிகளில் ரைசியும் ஒருவர் எனக் கூறப்படுகிறது.  60 வயதான ரைசி தன்னை பற்றி ஊடகங்களில் பேசும் போது இதைக் கவனமாகத் தவிர்த்துவிடுவார். ஊழலை எதிர்த்துப் போராடும் நபர் என்றும் ஈரானின் நிதிப் பிரச்சினைகளைச் சமாளிக்கச் சரியான நபர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார்.

Iran president latest: Ebrahim Raisi's life 'at risk' after helicopter crash amid heavy fog

அதிபர் தேர்தல்:

ரைசி முதலில் கடந்த 2017இல் அந்நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். இருப்பினும், அந்தத் தேர்தலில் அவர் ஹசன் ரூஹானியிடம் தோல்வி அடைந்தார். நான்கு ஆண்டுகள் கழித்து 2021இல் ரைசி மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், அவரது முக்கிய எதிரிகள் அனைவருக்கும் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டன.

இதனால் வலுவான தலைவர்கள் யாரும் ரைசிக்கு எதிராகப் போட்டியிடவில்லை. அந்த தேர்தலில் வாக்குப்பதிவும் வரலாறு காணாத வகையில் குறைந்து.. இருந்த போதிலும் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இரான் ஹெலிகாப்டர் விபத்து

பகீர் சம்பவம்:

என்ன நடந்தது ஈரான் அதிபராக இவர் பதவியேற்ற உடனேயே கலாச்சார சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. மேலும், போராட்டக்காரர்கள் ஒடுக்கப்பட்டன. கடந்த 2022 முறையாக ஹிஜாப் அணியாததால் மஹ்ஸா அமினி என்ற 22 வயது இளம் பெண் அந்நாட்டின் கலாச்சார காவலர்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மிக பெரியளவில் போராட்டங்கள் நடந்தது.

போராட்டங்களுக்கு எதிராக அந்நாட்டு போலீசார் வன்முறையைப் பயன்படுத்தினர். இந்த போராட்டங்களின் போது மட்டும் சுமார் 500 பேர் கொல்லப்பட்டதாகவும் 22 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உட்சபட்ச தலைவர்:

மேலும், ஈரான் நாட்டை பொறுத்தவரை அதிபரைக் காட்டிலும் கூடுதல் அதிகாரம் உள்ளவர் என்றால் அது அந்நாட்டின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தான். இந்த உட்சபட்ச தலைவரின் வாரிசாகவே ரைசி பார்க்கப்படுகிறார்.. 85 வயதான அய்துல்லா அலி கமேனிக்கு பிறகு அந்த பதவிக்கு ரைசியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

Previous Story

ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் அதிபர் அதிபர் நிலை என்ன? தேடுதல் தீவிரம் Helicopter carrying Iran’s president suffers a ‘hard landing,’ state TV says, and rescue is underway

Next Story

கடவுளே சந்தேகிக்கின்ற இப்ராஹீம் ரைசி மரணம்!