வாராந்த அரசியல் 30.06.2024

-நஜீப்-

இரு வாரங்கள் பொறுத்திருங்க!

வருகின்ற ஜூலை பதினேழாம் (17.07.2024) திகதி தேர்தல் ஆணைக்குழுவின் கரங்களுக்கு ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் கிடைக்கின்றது. அதற்கமைய  செப்தெம்பர் 27 அக்தோபர் 05ம் திகதிகளில் ஒரு நாளில் ஜனாதிபதித் தேர்தல் நடக்க அதிக வாய்ப்புக்கள். இதனால் வரும் மூன்று மாதங்களும் நாட்டில் கொதிநிலையில் இருக்கும்.

இந்தக் காலப் பகுதியில் என்னவெல்லாம் நடக்கும் என்று கற்பனை செய்வது கூட சற்றுக் கடினமாக இருக்கும். இது ஒரு மாற்றத்துக்கான தேர்தலாக இருப்பதால் இதுவரை அதிகாரத்தில் இருந்து வந்த சம்பிரதாயங்கள் இந்தத் தேர்தலில் மாற்றம் அடைய இடமிருக்கின்றது.

சம்பிரதாயக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வேறு சில அரசியல் சக்திகள் இன்று பிரதான போட்டியாளர்களாக வந்திருக்கின்றார்கள். இதனால் இதுவரை அதிகாரத்தை தமது கைகளில் வைத்திருந்தவர்கள் இலகுவாக ஒரு ஆட்சி மாற்றத்துக்கு இடம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே நாட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நாம் எச்சரிக்கின்றோம்.

சஜித்தை சுற்றி பச்சோந்திகள்!

சில மாதங்களுக்கு முன்னர் சஜித் அணியை பிரதிநிதித்துவம் செய்த பதுள்ளை- சமிந்த விஜேசரி என்ற உறுப்பினர் இராஜினாமாச் செய்து சஜித்துக்கு நெருக்கமான ஒருவருக்கு அந்த இடத்தை விட்டுக் கெடுத்தார். இதற்காக ஒரு கொடுக்கல் வாங்கள் நடந்தது என்றும் ஒரு கதை இருந்தது.

இப்போது மீண்டு அரசியல் பேசும் சமிந்த, தனது தலைவர் சஜித்துக்கு சில  செய்திகளை சொல்லி இருக்கின்றார்கள். அவரை சுற்றி ஒரு பட்சோந்திக் கூட்டம்தான் இருக்கின்றது. அவர்களை தலைவர்  கண்டு கொள்ளாவிட்டால் அவர் வரும் தேர்தலில் தோல்வியைத் தழுவுவது நிச்சம் என்று எச்சரித்திருக்கின்றார்.

தனது அரசாங்கம் பதவிக்கு வந்ததும் ஊழல் மோடிக்காரர்களையும் கள்வர்களையும் பிடிக்கும் அதிகாரத்தை தான் பீல்ட மார்ஷலுக்கத்தான் கொடுப்பேன் என்றதும் ஒரு கூட்டத்தில்  மக்கள் கரகோஷம் செய்தனர். ஆனால் இப்போது அந்த மனிதன் சஜித்தின் கழுத்தை நசுக்கிக் கொண்டிருக்கின்றார். இன்னும் டசன் கணக்கானவர்கள் ரணிலுடன் இரகசிய டீலில் இருக்கின்றார்கள் எனக் கூறுகின்றார் சமிந்த.

தமிழும் கொலையும் -அணுர!

கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பில் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றிய அணுரகுமார தமது அரசங்கம் பதவிக்கு வரும் போது வடக்குக் கிழக்கில் தமிழ் மக்கள் தமது தாய் மொழியில் நிருவாகம் செய்யும் உரிமையை பூரணமாகப் பெற்றுக் கொள்வார்கள். அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

இது அவர்களின் அடிப்படை உரிமை என்றும் அங்கு பேசி இருந்தார். அதே போன்று அவர்களின் கலாச்சாரப் பாரியங்களும் தனித்துவமும் பாதுகாக்கப்படும். உத்தியோகப்பற்றற்ற ஆயுதக்குழுக்கள் களையப்பட்டு அணைவருக்கும் பாதுகாப்பு உத்தவாரம் தரப்படும் என்றும் அணுர உத்தரவாதம் கொடுத்தார்.

கண்டியில் வாங்கியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது எனது உயிர் ஆபத்துக்கள் பற்றி பலர் என்னை எச்சரிக்கின்றார்கள். இது என்ன? இந்த நாட்டில் அரசியல் செய்வது குற்றமா? தேர்தலில் போட்டியிடுவது குற்றமா? ஏன் மக்கள் இப்படிச் சிந்திக்கின்றார்கள். ஏன் என்னைக் கொல்ல வேண்டும்? இதுவே இன்று நாட்டில் அராஜக ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் இருக்கின்றது என்பதற்கு இது நல்ல உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிரிகொத்த கொண்டாட்டங்கள்!

நாடு வங்குரோத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டது என்ற ஜனாதிபதி பிரகடனம் செய்த நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகத்தில் பட்டாசு கொழுத்திக் கொண்டாடி இருக்கின்றார்கள். தேர்தல் இன்றி இன்னும் சில ஆண்டகளுக்கு ரணிலுக்கு அதிகாரத்தில் இருக்க இடம் கொடுக்க வேண்டும் என்ற பேசிய ரங்கே பண்டார  அந்த இடத்தில் இருந்து ஊடகங்களுக்குப் பேசும் பேது ரணில் இன்றி உலக இயக்கமே இல்லை என்று ஒருவார்த்தையை பேசிதை நாம் பார்த்தோம்.

அதன் பொருள் என்ன என்று எமக்கு இதுவரை புரிந்து கொள்ள முடியாதிருக்கின்றது. இது தவிர நாடுபூராவிலும் உள்ள ஐதேக. முக்கியஸ்தர்கள் அந்த நேரத்தில் தமது நகரங்களில் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்;சியைத் தெரிவித்ததை பார்க்க முடிந்தது.

விடுதலை உணர்வில் மக்கள் மகிழ்ச்சியில் கொண்டாடுவதுதான் வழக்கம். ஆனால் இங்கு கட்சி அமைப்பாளர்கள் தமது சில கையாட்களுடன் வந்து இந்த காரியத்தை செய்திருக்கின்றார்கள்.

கூறியது கூறல் குற்றமே!

தமிழ் மொழியில் கூறியது கூரல் குற்றம் என்று ஒரு விடயம் இருக்கின்றது. இது நமது அரசியலுக்கும் பெருந்தும். நமது ஜனாதிபதி கடந்த புதன் இரவு நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுதலை பெற்றுத் விட்டது அந்த விடுதலையை நமக்குப் பெற்றுத் தந்த மகான் ரணில் என அந்தக் கட்சிக்காரர்கள் நாடுபூராவிலும் பட்டாசு கொழுத்திக் கொண்டாடியதை நாம் பார்த்தோம்.

ஆனால் நாடு பொருளாதார வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பது தொடர்பாக இதற்கு முன்பும் பலமுறை நமக்கு ரணில் கதை சொல்லி இருக்கின்றார். அவர் நல்லாட்சி செய்த (2015) காலத்தில் 2020 ஆண்டு ஆகும் போது நாடு வெளிநாடுகளில் இருந்து பெற்றுக் கொண்ட அனைத்துக் கடன்களில் இருந்து மீட்கப்பட்டிருக்கும் என்று சொல்லி இருந்தார்.

அதற்குப் பின்னர் அவர் ஜனாதிபதியான பின்னர் 2023  மாhச் மாதம் முதலாம் திகதியும் இதே விதமாக கடனில் இருந்து நாடு மீண்டது தொடர்பாக ஒரு பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் செய்திருந்தார். அவரது இந்தக் கதைகள் நம்மில் எத்தனை பேருக்கத்தான் நினைவில் இருக்கின்றது. எனவே இது கூறியது கூரல். இது நமக்குப் பழங் கஞ்சி.

நன்றி: 30.06.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

வங்குரோத்திலிருந்து விடுதலை பிரகடணமும் கொண்டாட்டங்களும்

Next Story

கார்டியன் நியூஸ்(3) 03.07.2024